லண்டன், அக்.10- கேரளாவைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு இங்கிலாந்தில் வேலை வழங்குவது தொடர்பாக மாநில அரசுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐரோப்பா-இங்கிலாந்து பிராந்திய மாநாட்டில் முதல்வர் பினராயி விஜ யன் மற்றும் நோர்க்கா ரெசிடென்ட் துணைத் தலைவர் பி.ஸ்ரீராம கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை யில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தா னது. நவிகோ தலைமை நிர்வாக அதி காரி மைக்கேல் ரீவ், நோர்கா ரூட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிகிரு ஷ்ணன் நம்பூதிரியிடம் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பெற்றார். பாதுகாப்பான, வெளிப்படை யான, சட்டப்பூர்வமான வழிகள் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களின் சுமூகமான இடப்பெயர்வைச் செயல்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்ப ரில் ஒரு வார கால யு.கே வேலை வாய்ப்பு விழாவை நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில், 3000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. கேரள அரசு சார்பாக நோர்கா ரூட்ஸ் மற்றும் இங்கிலாந்தில் சுகாதார சேவைகளை வழங்கும் ஒருங்கி ணைந்த பராமரிப்பு வாரியங்களான தி நவிகோ, ஹம்பர், நார்த் யார்க்ஷயர் ஹெல்த் அண்ட் கேர் பார்ட்னர்ஷிப் ஆகியவற்றுக்கு இடையேயான கலந்துரையாடலுக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. அமைச்சர்கள் பி.ராஜீவ், வி.சிவன்குட்டி, டாக்டர். ஜோஜி குரியாகோஸ், டாக்டர். சிவின் சாம், அஜித் கொளச்சேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.