world

img

திவாலானதால் நிறுவனங்கள் இழுத்து மூடல் இத்தாலியில் நெருக்கடி முற்றுகிறது

ரோம், செப்.6- பெருந்தொற்று மற்றும் உக்ரைன்  நெருக்கடியால் பாதிக்கப்பட்டதால், இத்தாலியில் உள்ள ஏராளமான நிறு வனங்கள் திவாலாகிவிட்டதாக அறிவித்து தங்கள் நிறுவனங்களை இழுத்து மூடிக்கொண்டிருக்கிறார் கள். இத்தாலியில் உள்ள பல நிறுவன ங்கள் ரஷ்யாவில் இருந்து கிடை க்கும் எரிவாயுவை நம்பியே உள் ளன. இந்த எரிவாயு கிடைப்பதில் ஏற்ப ட்ட தாமதத்தால் பல நிறுவனங்கள் இயங்குவதை நிறுத்திவிட்டன. அதோடு, எரிபொருள் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. ஒவ் வொரு நாளும் நிலைமை படுமோச மாகி வருகிறது. தங்கள் இயக்கத் தை நிறுத்தியுள்ள நிறுவனங்கள் கதவை மூடும் முடிவுக்கு வந்து விட்டன.  இந்நிலையில் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்புவதை நிறுத்தப் போவதாக ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு நடைமுறைக்கு வந்தால் ரஷ்ய எரிவாயுவை நம்பியிருக்கும் இத்தா லிய நிறுவனங்கள் அனைத்தும் மூடப் படும் அபாயம் எழுந்திருக்கிறது. இத்தாலியின் எரிவாயுத் தேவையில் 40 விழுக்காடு ரஷ்யாவில் இருந்து தான் இறக்குமதி ஆகிக் கொண்டிருக் கிறது. ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போன்று இத்தாலியும் தனது எரிவாயுக் கொள்கையை மறுபரிசீலனை செய்கிறது.

எரிவாயுத் தேவையை நிறைவு செய்வதற்காக அல்ஜீரியா போன்ற நாடுகளுடன்  புதிய உடன்பாட்டில் இத்தாலி கையெழுத்திட்டுள்ளது. புதிய எரிவாயுக் கட்டமைப்புகளை உருவாக்கும் வேலையிலும் இத்தாலி இறங்கியிருக்கிறது. தனது தேவை யை வெவ்வேறு வழிகளிலும் இருந்து எரிவாயுப் பற்றாக்குறையை சரி செய்யும்  திட்டத்தை இத்தாலி தயாரித்து வருகிறது. இத்தகைய ஏற்பாடுகளைத் தாண்டி இத்தாலிய நிறுவனங்கள் கடுமையான நெருக்க டியில் சிக்கித் தவித்து வருகின்றன. தங்கள் உணவுப் பழக்கங்களை மீறி உலகம் முழுவதும் பீஸ்சா மீதான காதல் பற்றி நிறைய ஊடகங் களில் எழுதப்பட்டிருக்கிறது. அதைத் தயாரிக்கும் டொமினோஸ் நிறு வனம் மிகவும் பிரபலமான ஒன்றா கும். இத்தாலிதான் பீஸ்சாவின் தாயகம் என்று கருதப்படுகிறது. பாரம்பரியமான பீஸ்சாக்களுடன் போட்டியிடும் வகையில் டொமி னோஸ் நிறுவனம் இத்தாலிக்குள் 2015 ஆம் ஆண்டில் நுழைந்தது.  இரண்டு நாட்களுக்கு முன்பாக, டொமினோஸ் பீஸ்சா விற்பனை செய்யும் கடைசிக் கடையை அந் நிறு வனம் இழுத்து மூடுவதாக அறி வித்தது. திவாலாகி விட்டதாக அறி விப்பு செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறது.  பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. திவா லாகி விட்டதாக அறிவித்துக் கொள்வ தற்கான விண்ணப்பம் அரசின் கவனத்தில் உள்ளது. அடுத்த 90 நாட் களுக்கு கடன் கொடுத்தவர்கள் தொல் லையில்லாமல் இருப்பதற்கான பாது காப்பு இந்த நிறுவனத்திற்கு இந்த  திவால் அறிவிப்பு தரும். 90 நாட்களுக்குள் தனது செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி விடுவதற் கான ஏற்பாடுகளை வேக, வேக மாக டொமினோஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இப்போது மட்டுமில்லை

நிறுவனங்கள் இழுத்து மூடப்படு வதற்கு பெருந்தொற்று மற்றும்  உக்ரைன் நெருக்கடி ஆகிய  இரண்டை மட்டுமே சுட்டிக்காட்டு கிறார்கள். ஆனால், போதிய விற் பனை இல்லாமல் நிறுவனங்களும், பெரிய கடைகளும் இழுத்து மூடப்படு வது பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, பெருந்தொற்று தொடங்குவதற்கு முன்பாகவே, அதாவது 2016 ஆம்  ஆண்டில் 4 ஆயிரத்து 439 நிறு வனங்களும், 2017 ஆம் ஆண்டில் 3 ஆயிரம் நிறுவனங்களும் திவாலாகி யிருக்கின்றன. தாங்கள் வலதுசாரியும் இல்லை,  இடதுசாரிகளும் இல்லை என்று  சொல்லிக் கொண்டு அதி தீவிரமான வலதுசாரிக் கொள்கைகளை இத்தா லியின் ஆட்சியாளர்கள் கடைப் பிடித்ததே இந்த மோசமான நிலை க்குக் காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். திவால் அறிவிப்பு வெளியிடும் நிலைமை இத்தாலியில் மட்டுமல்ல, மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் திவால் அறிவிப்பு விட்ட வண்ணம் உள்ளன என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 

;