world

img

மோசமான பணியிடச் சூழலை மாற்றுக!

வாஷிங்டன், செப்.14- அமெரிக்காவின் மின்னெசோட்டா மற்றும் விஸ்கோன்சின் மாகாணங்களில் உள்ள தனியார்துறை மருத்துவமனை செவிலியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். பெருந்தொற்றுக் காலத்திலும், அதன் தாக்கம் கடுமையாக இருந்த காலகட்டத்திலும் அமெரிக்காவின் மருத்துவ ஊழியர்கள் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பணியாற்றினர். அரசின் கொள்கை எதிர்மறையாக இருந்த போது, மருத்துவமனைகளுக்கு வந்தவர் களைப் பாதுகாக்கும் பணிகளில் மருத்துவ ஊழியர்கள் பெரும் அளவில் ஈடுபட்டனர். ஆனால், மருத்துவத்தை ஒரு வியாபாரப் பண்ட மாகப் பார்க்கும் அரசும், மருத்துவமனைகளை நடத்தி வரும் பெரு நிறுவனங்களும் நோயாளி களை வாடிக்கையாளர்களாகவே நடத்தின.  ஒருபுறம், தாங்கள் குணமாக வேண்டு மென்றால் கேட்கும் கட்டணத்தை நோயாளி கள் செலுத்தியே ஆக வேண்டும். மறுபுறத்தில், மருத்துவ ஊழியர்களுக்குக் குறைவான ஊதி யம் மற்றும் மோசமான பணியிட சூழல் என்ற அவலநிலை இருந்தது. இந்த நிலையை மாற்றி யாக வேண்டும் என்று மருத்துவர்கள், செவி லியர்கள் மற்றும் மருத்துவமனையின் ஊழி யர்கள் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால் லாபம் மட்டுமே குறியாக இருந்த தனியார் மருத்துவமனைகள் இதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில், அண்மைக்காலமாக அத்தி யாவசியப் பொருட்கள் கடுமையாக விலை ஏறியுள்ளன. தங்களுக்குத் தரப்பட்டு வரும் ஊதியம் போதாது என்றும், 27 விழுக்காடு ஊதிய உயர்வைத் தர வேண்டும் என்று அமெரிக்கா  முழுவதும் குரல்கள் எழுந்தன. இது குறித்து மருத்துவமனைகளின் நிர்வாகங்கள் கவலைப் படாததால், இரண்டு மாகாணங்களில் வேலை  நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருக் கிறார்கள். மின்னெசோட்டா மற்றும் விஸ்கோன் சின் ஆகிய இரண்டு மாகாணங்களிலும் சுமார் 15 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கிறார்கள்.

லாபமா, நோயாளிகளா?

லாபத்தை விட நோயாளிகளே முக்கியம் என்று எழுதப்பட்ட அட்டைகளை வேலை நிறுத்தம் செய்து வரும் மருத்துவ ஊழியர்கள்  ஏந்தியவாறு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க வரலாற்றில் இது தான் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை செவிலியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் என்று கூறப்படுகிறது. பல மருத்துவமனை களுக்கு வெளியில் ஊழியர்கள் குழுமி கோரிக்கைகளை முழங்கினர்.  தங்கள் பிரச்சனைகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள மின்னெசோட்டா செவிலியர் சங்கம், “மின்னெசோட்டாவில் உள்ள மருத்துவ மனைகளில் வேலைப்பளு கடுமையாக உள் ளது. போதிய ஆட்கள் பணியில் அமர்த்தப் படவில்லை. அதோடு, நோயாளிகளிடம் எக்கச் சக்கமாக கட்டணம் வசூலிக்கிறார்கள்” என்று கூறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நெருக்கடியான சூழல் அமெரிக்காவில் உள்ள பல்வேறு துறைகளின் ஊழியர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. பல துறை களில் ஊழியர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது இரு மாகாணங் களில் மருத்துவ ஊழியர்கள் களத்தில் குதித்துள் ளனர்.

சரக்குப் போக்குவரத்திலும் வேலை நிறுத்தம்

அமெரிக்காவின் சாலைவழியான சரக்குப் போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் 90 ஆயிரம் தொழிலாளர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதியில் இருந்து வேலை நிறுத்தம் செய்யப் போகிறார்கள். அரசு தரும் புள்ளிவிபரங்களின் படியே, கிட்டத்தட்ட 30 விழுக்காடு சரக்குப் போக்குவரத்து உடனடியாகப் பாதிக்கப்பட வுள்ளது. வேலை நிறுத்தம் தீவிரமானால் கூடு தல் பாதிப்பு இருக்கலாம். பொருட்கள் தட்டுப் பாடு ஏற்பட்டால் கடுமையான விலையுயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

;