world

img

மாலி நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் – 31 பேர் பலி

 

மாலி நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அந்நாட்டு அரசிற்கு எதிராக ஆயுதம் தாங்கிய குழுவினர் கலகம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் சாங்கோ நகரில் இருந்து பென்டிஹரா நகருக்கு வெள்ளியன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தீடீரென பேருந்தை வழிமறித்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அனைவரையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட துவங்கினர். இதன்பின் அப்பேருந்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.  

இந்த பயங்கரவாத தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 31 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.