மாலியில், பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானதில்,13 வீரர்கள் உயிரிழந்தனர்.
மாலி நாட்டில் பயங்கரவாத குழுக்களை முற்றிலும் ஒழிக்க பிரான்ஸ், உள்நாட்டு ராணுவத்துடன் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு எல்லையோரப் பகுதியில் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் 2 ஹெலிகாப்டர்களில் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த பிரான்ஸ் ராணுவ வீரர்கள் 13 பேர் உயிரிழந்தனர்.