world

img

கூட்டணிக்காக அலை மோதும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்

கேப் டவுன், ஜூன் 6- தென் ஆப்பிரிக்க நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியும் பெரும் பான்மை இன்றி இருக்கும் நிலையில்  ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி  கூட்டணிக்காக அனைத்து கட்சிகளுட னும் பேச்சு வார்த்தை நடத்துகிறது. 

ஆப்பிரிக்க கருப்பின மக்களின் போராளியான நெல்சன் மண்டேலா தலைமை தாங்கி வழிநடத்திய  ஆப்பி ரிக்க தேசிய காங்கிரஸ்  கட்சி, கடந்த 30 ஆண்டுகளாக பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் வரலாற்று திருப்பு முனையாக 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பெரும்பான்மையை இழந்துள்ளது. 

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 2019  ஆம் ஆண்டு  நடந்த பொதுத் தேர்த லில் 57.5 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தற்போதைய  தேர்தலில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எனினும் பெரிய கட்சியாக உள்ளது. இந்நிலையில் ஆட்சி அமைப்பதற்காக கூட்டணி அமைக்க அனைத்து கட்சிக ளுடனும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி த்து வருகிறது. 

வறுமை, வேலையின்மை, பொரு ளாதார நெருக்கடி, பொருளாதார சமத்துவமின்மை, அதிக மின்வெட்டு , வன்முறைகள், குடிநீர் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளுக்கு முறையான தீர்வு காணாததால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது  30 ஆண்டுகால பெரும்பான்மையை தற்போது இழந் துள்ளது. தென்னாப்பிரிக்காவின் பிர தான எதிர்க்கட்சியான  ஜான் ஸ்டீன்ஹுய் சென் தலைமையிலான ஜனநாயக கூட்டணி  இரண்டாம் இடம் பிடித் துள்ளது.

அதேவேளையில் நிலச்சீர்திருத் தம், மாற்று பொருளாதாரக்கொள்கை, தனியார்மய எதிர்ப்பு நடவடிக்கை ஆகியவற்றை தீவிரமாக முன்னெடுத் ததன் காரணமாக தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா வின் ஸ்பியர் ஆப் தி நேஷன் கட்சி 12.6 சதவீத வாக்குகள் பெற்று  மூன்றாவது இடத்திலும்,தென்னாப்பிரிக்க இடது சாரிகளான பொருளாதார விடுதலை போராளிகள் (the Economic Freedom Fighters) கட்சி  9.4 சதவீத வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

;