ஜெருசலேம், ஜூலை 11- பாலஸ்தீனத்தில் தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை திறந்தவெறி சிறையாக இஸ்ரேல் மாற்றிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் பிரான்செஸ்கா ஆல்பனீஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதோடு, அப்பகுதிகளில் மக்களைக் குடியேற்றும் வேலைகளையும் செய்து வருகிறார்கள். குறிப்பாக, மேற்குக் கரைப்பகுதி யில் தனது ஆக்கிரமிப்பை முழுமையடையச் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரு கின்றன. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, அமெரிக்காவின் ஆதரவோடு தனது சட்ட விரோத நடவடிக்கைகளை இஸ்ரேல் செய்து வருகிறது. இஸ்ரேலின் இந்த மனிதகுல விரோத நடவடிக்கைகள் குறித்துக் கருத்து தெரிவித்த ஐ.நா.சபையின் சிறப்பு தூதர் பிரான்செஸ்கா ஆல்பனீஸ், “கடந்த 56 ஆண்டுகளில் அடிப்படை உரிமைகளை குற்றச் செயல்களாகவும், கூட்டம் கூட்டமாக சிறைகளில் அடைத்தும் இஸ்ரேல் பாலஸ்தீனப் பகுதிகளை நிர்வகித்து வருகிறது. தான் ஆக்கிரமித்துள்ள அனைத்து பாலஸ்தீனப் பகுதிகளையும் திறந்தவெளிச் சிறையாக மாற்றியுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்தக் கூட்டத்தில் ஆல்பனீஸ் அளித்துள்ள அறிக்கையில்தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். தொடர் கண்காணிப்பில் உள்ளனர். காரண மில்லாமல் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். பாலஸ்தீனப் பகுதிகளை 1967 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இஸ்ரேல் ஆக்கிரமித்து வரு கிறது. அப்போதிருந்து எட்டு லட்சம் பாலஸ்தீனர்கள் மோசமான சட்டங்கள் மூலம் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் 12 வயது சிறுவர்களும் அடங்குவர். தங்கள் கருத்துக் களைக் கூறுபவர்கள், கூட்டமாகக் கூடு பவர்கள், அங்கீகாரம் இல்லாத உரைகள் உள்ளிட்ட வற்றிற்கு எதிராக இஸ்ரேல் சட்டங்கள் இருந்தன. அவை பாலஸ்தீன மக்களை ஒடுக்க நடை முறைப்படுத்தப்பட்டன. தனது அறிக்கையில், “ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள நிர்வாகத்தின் கீழ் வசிப்ப தால் பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பை இழந்து நிற்கிறார்கள். நான்கு சுவர்களுக்கு நடுவில், சோதனைச் சாவடிகளுக்குள், சுற்றி வளைக்கப் பட்ட கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்குள் அப்பாவி மக்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். திறந்த வெளியில் கூட சிறைக்குள் இருக்கும் நிலைமைதான் அவர்களுக்கு இருக்கிறது” என்று ஆல்பனீஸ் கூறியுள்ளார். செயலில் காட்டுங்கள் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி தெரிவிப்பதாக அமெரிக்கா கூறியிருக் கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ளார். அதி தீவிர வலதுசாரிகள் தற்போது அமைச்சர்களாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலில் காட்ட வேண்டும் என்று பாலஸ்தீன நிர்வாகம் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.