world

img

கூட்டாளிகளை வேவு பார்த்த அமெரிக்கா

வாஷிங்டன், ஏப்.13- கடந்த பல மாதங்களாகத் தனது கூட்டாளி நாடுகளை அமெரிக்கா வேவு பார்த்தது தொடர்பான  பெண்டகன் ரகசிய ஆவணங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் இருந்தே பல்வேறு ரகசிய ஆவணங்கள் வெளியாகி வந்தன. தற்போது கிட்டத்தட்ட ஆவணங்கள் முழுமையாக வெளியாகி யுள்ள நிலையில், நெருக்கமான கூட்டாளிகளை அமெரிக்கா தொடர்ந்து வேவு பார்த்தது அம்பல மாகியுள்ளது. உக்ரைன், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ராணுவ பலம் குறித்து  அமெரிக்கா உளவு பார்த்ததோடு, அவற்றின் பல வீனங்களை பட்டியலிட்டு ஆவணப்படுத்தி யிருக்கிறது. இந்த ஆவணங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தும், இணைய தளங்களில் உலாவி வருகின்றன. இந்த ரகசிய ஆவணங்கள் பற்றிய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், “ரஷ்யாவின் தற்காப்பு மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. உக்ரைனின் போர்ப்பயிற்சி மற்றும் ஆயுதத் தளவாடங்கள் விநியோகம் ஆகியவற்றில் உள்ள பற்றாக்குறை பெரும் சேதத்தை விளை விக்கக்கூடியது” என்று ஒரு ஆவணமும், மற்றொரு ஆவணத்தில் தரைப்படைகளுக்கு தற்போது விமானப்படை வழங்கி வரும் ஆதரவு 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் பெருமளவு குறைந்துவிடும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் சண்டையில், உக்ரைனின் விமானப்படை தனது போர் விமானங்கள் மூலமாக தரைப்படைக்கு ஆதரவு தந்து வந்தது. இந்த ஆதரவு உக்ரைனின் தற்காப்புக்கும், எதிர்த் தாக்குதல்களுக்கும் பெருமளவில் உதவியாக இருந்தது. உக்ரைனின் வான்பகுதியை ரஷ்யா கைப்பற்றாமல் இருக்கச் செய்வதில்  விமானப் படையின் செயல்பாடுகள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. ஆனால், விமானப்படையின் பலம் வெகுவாகக் குறைந்து விடும் என்பதை அமெரிக்கா தனது உளவு வேலை மூலம் கண்டறிந்திருக்கிறது. சில நேரங்களில் உக்ரைனின் எதிர்த்தாக்குதல் களுக்கு வெற்றி கிடைத்தபோது, அது பெரிய அளவில் ஊடகங்களில் செய்திகளாக இடம் பிடித்தன.  ஆனால், அது தொடரவில்லை. அவ்வாறு தொடர முடியாது என்பதை இந்த ரகசிய ஆவணங்களில் உள்ள குறிப்புகள் அம்பலப்படுத்துகின்றன. அதே போன்று, தனது நட்பு நாடான எகிப்து, ரஷ்யா வுக்கான ஏவுகணைகளைத் தயாரித்துக் கொண்டி ருக்கிறது என்றும் குறிப்பு கூறுகிறது. ஆனால், உளவுத்துறையோ, எகிப்து போன்ற நட்பு நாடுகள் அவ்வாறு செய்யாது என்று தற்போது கூறுகிறது.

சிக்கலில் தென் கொரியா

ஆயுதங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்றாகும். உக்ரைன் -ரஷ்யா சண்டை தொடங்கிய சில நாட்களிலேயே உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்புமாறு தென்கொரியாவை அமெரிக்கா வலியுறுத்தி யிருக்கிறது. பிற நாடுகளுக்கு ஆயுதங்கள் அனுப்பு வதை பெரும் வர்த்தகமாக தென் கொரியா செய்து  கொண்டிருந்தாலும், போர் நடக்கையில், அந்தப்  போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கு ஆயுதங்களை அனுப்புவது இல்லை என்பது நீண்டநாள் கொள்கை யாகும். அமெரிக்காவின் வலியுறுத்தலின்போது, தென் கொரியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இந்தக்  கொள்கை விவாதிக்கப்பட்டிருக்கிறது. அக்கவுன்சி லில் இரு உறுப்பினர்கள் தங்களுக்குள் தொலை பேசியில் பேசிய உரையாடல் அமெரிக்க உளவுத்துறையிடம் இருந்திருக்கிறது. இதெல்லாம் தற்போது கசிந்துள்ள உளவுக்குறிப்புகள் தெரிவிக் கின்றன. வழக்கம்போலவே, இந்த உளவுக் குறிப்பு களில் உண்மையில்லை என்று தென் கொரியா மறுத்துள்ளது. ஜப்பான், ஆஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் அமெரிக்க உளவுத்துறை தன் கைவரிசையைக் காட்டியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.