வர்த்தக வரி தொடர்பாக மீண்டும் கடிதங்கள்
அமெரிக்கா தனது வர்த்தகக் கூட்டாளிகளுக்கு வர்த்தக வரிகள் தொடர்பாக கிட்டத்தட்ட 200 கடிதங்களை அனுப்பும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் வெளிவரும்போது, அது ஒரு முடிக்கப்பட்ட ஒப்பந்தமாக இருக்கும். வர்த்தகக் கூட்டாளிகள் அதில் குறிப்பிட்டுள்ள வரியை செலுத்துவார்கள். அது தான் எங்களது ஒப்பந்தம் என கூறியுள்ளார். வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு ஆகஸ்ட் 1 வரை காலக்கெடு கொடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு ஆதாரம் இருந்தால் வரவேற்போம் – பாக்
பஹல்காம் தாக்குதலில் டிஆர்எப் அமைப்பு ஈடுபட்டதற்கான ஆதாரம் கொடுத்தால் நாங்கள் வரவேற்கிறோம் என பாகிஸ்தான் வெளி யுறவுத் துறை அமைச்சர் முகமது இஷாக் தர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றுள்ள அவர் டிஆர்எப் அமைப்புக்கும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பில்லை. அப்படி தொ டர்புபடுத்துவது தவறானது. பஹல்காம் தாக்குதலில் அவர்கள் தான் ஈடுபட்டார்கள் என்ற உறுதியான ஆதாரம் இருந்தால் அதை நாங்க ளும் வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.
உடனடி போர் நிறுத்தத்திற்கு கம்போடியா அழைப்பு
தாய்லாந்து-கம்போடியாவுக்கு இடை யிலான ராணுவ மோதல் மூன்றாவது நாளாக தொடர்ந்த நிலையில் இரு நாட்டிலும் எல்லையோர மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இடம்பெயரத் துவங்கியுள்ளனர். இந்த மோதலால் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கம்போடியா உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் இடையே ஜூலை 24 அன்று மோதல் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
பாலஸ்தீனம் தொடர்பான பிரான்ஸ் முடிவுக்கு இத்தாலி எதிர்ப்பு
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீ கரிக்கப் போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அறிவித்தார். இதற்கு இத்தாலி பிரதமர் மெலோனி பாலஸ்தீன அரசை அமைப்பதற்கு முன்பே அதனை அங்கீ கரிப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத் தும் என்று அக்கருத்துக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளார். மேலும் இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ள அவர் “நான் பாலஸ்தீன அரசை மிகவும் ஆதரிக்கிறேன், ஆனால் அதை நிறுவுவதற்கு முன்பு அதை அங்கீகரிப்பதை நான் ஆதரிக்கவில்லை,” என்று கூறியுள்ளார்.
மலேசியா: பொருளாதார நெருக்கடி மக்கள் வீதியில் போராட்டம்
விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் மலேசியாவில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நெருக்கடிகளை சரிசெய்யும் நடவடிக்கைகளை பிரதமர் அன்வர் தலைமையிலான அரசு மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். முக்கிய நகரங்களில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பிரதமர் அன்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.