world

img

ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் இந்திய பெருமுதலாளி குடும்பங்கள் அளவிட முடியாத லாபம் ஈட்டுகின்றன

ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் இந்திய பெருமுதலாளி குடும்பங்கள் அளவிட முடியாத லாபம் ஈட்டுகின்றன

வாஷிங்டன்,ஆக. 20  ரஷ்யாவிடம் குறைந்த விலை க்கு கச்சா எண்ணெய்யை வாங்கி மறுவிற்பனை செய்வதன் மூலம் இந்தியா “அளவிட முடியாத” அள விற்கு லாபம் ஈட்டுகிறது. இந்த நட வடிக்கையில் இந்தியாவின் சில மிகப் பணக்காரக் குடும்பங்கள் ஈடு பட்டுள்ளன என்று அமெரிக்க கரு வூல செயலாளர் ஸ்காட் பெசண்ட் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.  அதே போல ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவ தற்காகத்தான் இந்தியா மீது பொரு ளாதாரத் தடைகளை விதித்துள்ள தாக அமெரிக்க வெள்ளை மாளிகை யின் பத்திரிகைச் செயலாளராக உள்ள கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.    ரஷ்யா-உக்ரைன் போரை முடி வுக்குக் கொண்டு வர டிரம்ப் கடுமை யான அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியா கத்தான் இந்தியா மீது பொருளா தாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கை களையும் எடுத்துள்ளார். இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என் பதை அவர் மிகத் தெளிவாகத் தெரி வித்துள்ளார் என்றும் குறிப்பிட் டுள்ளார்.  அதே போல வெள்ளை மாளிகை யின் மூத்த வர்த்தக ஆலோசகரும், பொருளாதார நிபுணருமான பீட்டர் நவரோ எழுதிய ஒரு கட்டுரையில், அம்பானியின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் இந்தியா வாங்கும் ரஷ்ய எண்ணெய் மூலமாக கிடைக்கும் வருவாயானது இந்தியா வில் “அரசியல் தொடர்பு கொண்ட எரிசக்தி துறை சார்ந்த பெரும் முதலா ளிகளுக்கும், அதன் மூலம் புடினின் போருக்கும் தேவையான பணம் கிடைக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.