இஸ்ரேல் துறைமுகத்துக்குச் சென்ற கப்பலை தாக்கி மூழ்கடித்த ஹவுதிகள்
சனா, ஜூலை 11- இஸ்ரேலின் எய்லத் துறைமுகத்துக்கு சென்ற எட்டர்னிட்டி சி என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி அமைப்பு தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் பாதிப்படைந்த கப்பல் செங்கடல் பகுதியில் மூழ்கியது. ஹமாஸ் அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டிருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை சில மாதங்களுக்கு முன் இஸ்ரேல் ராணுவம் முறித்து விட்டு பாலஸ்தீனத்தில் தாக்குதலை துவங்கியது. இதனால் ஆத்திரமடைந்த ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பு, பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் தனது இனப்படுகொலை தாக்குதலை நிறுத்தும் வரை அமெ ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ள நாடுகள் மற்றும் நிறுவனங்களின் கப்பல்கள் மீது செங்கடல் பகுதியில் மீண்டும் தாக்கு தலை தொடர்வோம் என அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்படி தற்போது அக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இந்தியர்கள் உட்பட மொத்தம் 25 ஊழி யர்கள் பயணித்துள்ளனர். இந்தியர்கள் உட்பட சிலர் கப்பல் மூழ்கும் முன் ஹவுதிகளால் மீட்கப்பட்டுள்ளதாக வும் சிலர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. அவர்களை ஹவுதிகள் வைத்திருக்கும் இடம் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கப்பல் ஊழியர்களை விடுவிக்க அவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப் படுகிறது.