world

img

பெட்ரோல் நிலையத்தில் உலக நாடுகள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உரந்தைராயன் குடிகாடு கிராமத்தில் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஹெஜ்.பி.(HP) பெட்ரோல் பங்க்கில்  உலகின் முக்கியமான  20 நாடுகளின் திசை, அதன் தூரம் கி.மீ. மற்றும் மைல் இரண்டு  அளவுகளிலும் நீண்ட பலகை மூலம் அனைவரும் பார்க்கும்  வகையில் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தினசரி காலை செய்தி நாளிதழ், புத்தகங்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கான காற்றோட்டமான உணவகம், குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டுப் பூங்கா போன்றவைகளும் இயற்கை சூழ்ந்த வகையில் அமைக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

;