what-they-told

img

கல்வி கட்டணம்; பஸ், மெஸ் பீஸ் தனியார் பள்ளிகள் கெடு பிடி வசூல்

கண்டு கொள்ளாத கல்வித்துறை  பெற்றோர்கள் அவதி

விருதுநகர், ஜூன் 19- விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள சில தனியார் பள்ளி நிர்வாகத்தி னர் பெற்றோர்களிடம் கல்வி கட்ட ணம், பேருந்து மற்றும் உணவுக் கட்ட ணம் கேட்டு கெடு பிடி செய்து வரு கின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்ற னர். அநேகமாக தமிழகம் முழுவதும் இதுதான் நிலை என்று தெரிகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 100க்கு மேற்பட்ட தனியார் மெட்ரிக் மற்றும் மத்திய கல்வி வாரிய பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும்  பள்ளிகள் உள்ளன. இதில்   ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர்.  தற்போது பொது முடக்கம் அறி விக்கப்பட்டதால் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில்கள் முற்றிலும் பாதிக்க ப்பட்டுள்ளன. பிரதான தொழிலான பட்டாசுத் தொழில் வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. தீப்பெட்டித் தொழில் மூலப் பொருள் தட்டுப்பாடு காரணமாக சரிவர நடக்கவில்லை. இதில் அத்தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர். 

கடந்த 3 மாத காலமாக போதிய வரு மானமின்றி கடன் வாங்கி தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.  இந்தநிலையில், பள்ளிகள் எப் போது திறக்கப்படும் என அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாக வில்லை. ஆனால், விருதுநகர் மாவட்ட த்தில் உள்ள அனைத்து  தனியார் பள்ளி  நிர்வாகங்களும்  மாணவ, மாணவி களுக்கு ஆன்-லைன் மூலம் பாடம் நடத்த துவங்கியுள்ளன. நேரடியாக வகுப்பறையில் முகத்திற்கு நேரமாக முகம் பார்த்து சொல்லிக் கொடுத்தாலே புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் தனியார் பள்ளி நிர்வாகங்களின் இச்செயலால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி யுள்ளனர்.  அதேநேரத்தில் சில தனியார் பள்ளி  நிர்வாகங்கள், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் மற்றும் நோட்டீஸ் மூலம் கல்வி கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் உணவுக் கட்டணமும் செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்து வரு கின்றனர். மேலும் நோட்டு புத்தகங்கள், உரைநூல்கள் மற்றும் புத்தகங்கள் வாங்க வேண்டும் எனவும் கட்டாயப் படுத்தி வருகின்றனர். 

பள்ளித் திறப்பதற்கே உத்தரவாதம் இல்லாத இச்சூழ்நிலையில், உணவு மற்றும் பேருந்து கட்டணத்தை கேட்பது எந்த விதத்தில் நியாயம் என பெற் றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் குழந்தைகள், தங்க ளது கல்வி கட்டணத்தை செலுத்துங்கள்; இல்லையென்றால் சரியாக பாடம் சொல்லித் தர மாட்டார்கள் என பெற் றோர்களிடம் அழுது புலம்புகின்றனர்.  இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் சென்றுள்ளன. ஆனால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரோ, கல்வித்துறையோ,  இந்த விஷயத்தில் கண்டும் காணாதது போல் உள்ளார் என பெற்றோர்கள் குற்றம் சாட்டி வரு கின்றனர். கல்வி கட்டணம் கேட்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது சுட்டு விரலைக் கூட அசைக்க அவர் தயார் இல்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

இதுபற்றி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சமயன் கூறுகையில், “3 மாத பொது முடக்கத் தால் ஏராளமான பெற்றோர்கள் வேலையின்றி, போதிய வருமானம் இல்லாமல் உள்ளனர். தங்களது அன் றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிர மப்பட்டு வருகின்றனர். பள்ளியே திறக்க ப்படாத இச்சூழ்நிலையில் தனியார், மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி நிர் வாகங்கள் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம், பேருந்து, உணவு கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்வதும்,  புத்த கங்கள் வாங்கச் சொல்லி நிர்ப்பந்தம் செய்வதும் மிகவும்  கொடுமையான விஷயமாகும். இப்பள்ளிகள் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மாணவர்களைத் திரட்டி இந்திய மாணவர் சங்கம் சார்பில்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்று கையிடும்  போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்.

;