சென்னை,ஏப்.5- தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பின் படி ஊரடங்கு உத்தரவு முடியும்வரை பெட்ரோல் பங்குகள், இனி காலை 6 மணி முதல், பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா முன்னெச்ச ரிக்கையாக பகல் 1 மணிக்கு பின்னர் பொது மக்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் விநி யோகிக்கப்படாது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் பங்குகளில் எப்போதும் ஊழியர்கள் சிலர் இருப்பார் கள் எனவும், ஆம்புலன்ஸ்கள், அத்தியா வசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாக னம், அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை கொண்ட அரசு வாகனம் போன்றவற்றிற்கு வழக்கம்போல் பெட்ரோல் நிரப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.