தென்கொரியாவில் அட்மன் என்ற நிறுவனம் புது விதமான முகக் கவசத்தை மக்களிடத்தில் அறிமுகப்படுத்தி யுள்ளது. இந்த புதிய முகக்கவசம் வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மை உடையது. இதனால் சாப்பிடுவதற்கு, தண்ணீர் அருவதற்கும் மாஸ்கை அடிக்கடி கழட்ட வேண்டியதில்லை. கொரிய மொழியில் கோ என்றால் மூக்கை குறிக்கும் அதனால் இந்த முகக்கவசத்தை கோஸ்க் என்று அழைக்கின்ற னர். மூக்கின் வழியாகவே கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது இந்த கோஸ்க் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.