what-they-told

img

முத்தலாக் மசோதா நிறைவேற்றம் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுதில்லி, ஜூலை 25 - முஸ்லிம் பெண்களை பாதுகாப்பதாக கூறி இரட்டை வேடத்துடன் முஸ்லிம் சமூகத்தின் மீது கடும் தாக்குதலை கட்டவிழ்த்துவிடும் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு கருவியாக முத்தலாக் தடுப்பு மசோதாவை மக்களவையில் பாஜக அரசு வியாழனன்று கொண்டு வந்து நிறைவேற்றியது. இம்மசோதா ஏற்கெனவே கடந்த மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டு காலாவதியானது. இந்நிலையில் மீண்டும் கொண்டுவரப்பட்ட இம்மசோதா, முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் பிரச்சனையை சிவில் பிரச்சனை என்பதற்கு பதிலாக கிரிமினல் குற்றமாக வரையறை செய்கிறது. வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது மசோதாவுக்கு ஆதரவாக 302 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் பதிவாகின. மசோதாவை எதிர்த்து இடதுசாரிகள், காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்களித்தன.