what-they-told

img

பூமிக்கு உயிருண்டு - சிதம்பரம் இரவிச்சந்திரன்

உலகம் எத்தனையோ விஞ்  ஞானிகளைக் கண்டுள் ளது. ஆனால் தனது 103 ஆவது வய தில் பிரிட்டனில் சமீபத்தில் காலமான  ஜேம்ஸ் லவ்லாக் ஒரு அபூர்வ விஞ்  ஞானி. பூமிக்கு உயிருண்டு. அது சுய மாக தன்னை கவனித்துக் கொள்ளும்  இயற்கையமைப்பே சூழல் என்ற கய்யா (Gaia) கோட்பாட்டை லவ்  லாக் உருவாக்கினார். இவர் கால நிலை மாற்றம் குறித்து ஆராய்ந்த பிரபல விஞ்ஞானி. என்றாலும் இவ ரது கய்யா கோட்பாடு சூழல் ஆர்வ லர்களிடையில் கடும் எதிர்ப்பையும், விவாதங்களையும் எழுப்பியது. லவ்லாக் பிரிட்டனில் பிரபல கால நிலை மாற்ற நிபுணராகவும், சுதந்திர மான ஆய்வாளராகவும் இருந்தார். 1960 முதல் தனக்கென்று சொந்தமாக ஆய்வகத்தை நிறுவி அதில் பல்வேறு  அறிவியல் பிரிவுகளில் ஆய்வுகளை  மேற்கொண்டார். இவரது முக்கிய ஆய்வுகள் காலநிலை மாற்றம் மற்றும் சூழல் பாதுகாப்புடன் தொடர்புடையவை.

கடந்த சில ஆண்டுகள் வரை தன்  ஆய்வகத்தில் பல்வேறு ஆய்வு களில் இவர் ஈடுபட்டிருந்தார். இடைக்  காலத்தில் அமெரிக்க விண்வெளிக் கழகம் நாசாவின் ஆலோசகராக பணி புரிந்தார். அப்போது தன் கய்யா  கோட்பாட்டை அவர் வெளியிட்டார்.  பூமியில் எல்லா உயிரினங்களும் ஒன்  றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள் ளன என்றும், சுயமாகத் தன்னைக் கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பே சூழல் என்பது என்று கய்யா கோட் பாடு கூறுகிறது.

எதிர்ப்பும் ஆதரவும்

லின் மார்குலிஸ் என்ற நுண்ணு யிரியல் நிபுணர் லவ்லாக் இக்கோட்  பாட்டை உருவாக்க உறுதுணை யாக இருந்தார். 2004 இல் “அணு ஆற்றல் ஆரோக்கியகரமான சூழ லிற்கு அத்தியாவசியமானது” என்று  லவ்லாக் கூறியது அறிவியல் உல கில் பெரும் விவாதங்களை ஏற்படுத்  தியது.  “புவி வெப்ப உயர்வை அணு  ஆற்றல் மூலம் தடுக்க முடியும்” என்  பது அவரது கருத்து. அதனால் அணு  ஆற்றலுக்கு ஆதரவான சூழலிய லாளர்கள் அமைப்பு (Environ -mentalists for Nuclear) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர் இவரே. மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்ற லவ்லாக் மாதிரிகளை  மிகக் குளிர்ந்த சூழ்நிலையில் பாது காக்க உதவும் தொழில்நுட்பத்தை (cryo preservation technology) கண்டுபிடித்தார். க்ரையோனிக்ஸ் என்ற அறி வியல் பிரிவிற்கு லவ்லாக் பெரும் பங்காற்றினார். எலக்ட்ரான் கேப்ச்சர் டிடெக்ட்டர் (electron capture  detecter) என்னும் தொழில்நுட்பத் தையும் இவரே உருவாக்கினார். இது  வாயு மண்டலத்தில் குளோரோ புளூரோ கார்பன்கள் இருப்பதைக் கண்டறிய உதவும் தொழில்நுட்பம். 2000 இல் ஆல்காக்களைப் (பாசி கள்) பயன்படுத்தி கார்பனை உறிஞ்  சும் தொழில்நுட்பத்தை உருவாக்கும்  வாய்ப்புகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். விவாதங்கள், கடும் விமர்சனங்கள் தனக்கு எதிராக எழுந்தபோதும் சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய தன் ஆய்வுகளையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த ஜேம்ஸ் லவ்லாக்கின் பெயர் என்றும் நினைவுகூரப்படும் என்பதில் ஐயமில்லை.