what-they-told

img

நாய் மற்றும் பூனை கண்காட்சி 250 நாய்கள், 120 பூனைகள் பங்கேற்பு

கோவை, ஜூன் 5- கோவையில் ஞாயிறன்று நடைபெற்ற நாய் மற்றும் பூனை கண்காட்சியில் 250 நாய்கள், 150 பூனைகள் பங் கேற்றன. ஆனைமலை கேனல் கிளப் சார்பில் அனைத்திந்திய நாய் கள் கண்காட்சி மற்றும் கோயம்புத்தூர் கேட்டெரி சங்கம் சார்பில் சர்வதேச பூனைகள் கண்காட்சி ஞாயிறன்று கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. கோவை, தமிழகம் மற்றும் இந்தியா வின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாய் கண்காட்சியில் 250 நாய்கள் கலந்துகொண்டன. ஒவ்வொரு நாய் இனத்திற்கான தரநிலைகளை நடுவர் குழு மதிப்பீடு செய்தனர். பஞ்சாப் பைச் சேர்ந்த நடுவர்கள் கோமல் தனோவா மற்றும் குஜராத் தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் ஆகியோர் சர்வதேச போட்டி களில் பின்பற்றப்படும் இனங்களின் தரத்தின் அடிப்படை யில் நாய்களை மதிப்பிட்டனர். இந்நிகழ்வில் இந்தியா இன நாய்களும் (கொம்பை, சிப்பிப்பாறை, மேற்கத்திய நாடு களை சேர்ந்த இனங்களும் (ரோட்வெய்லர், ஜெர்மன் ஷெஃபர்ட், கிரேட்டேன், ஹஸ்லி) பங்குபெற்றுன. இதேபோன்று பூனை கண்காட்சியில் 120 பூனைகள் பங் கேற்றது. 10க்கும் மேற்பட்ட பூனை இனங்கள் பங்கேற்றன. இவை ஹைதராபாத், மைசூர், சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம் திருவனந்தபுரம் மற்றும் கேரளாவின் பல  மாவட்டங்களிலிருந்தும் பங்கேற்றன. 10 தர வகையில் இந்த  பூனைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அந்த பூனை இனங்க ளுக்கு உரிய தரநிலைகளை மதிப்பீடு செய்யப்பட்டது. இம் முறை போட்டியில் கலந்துகொள்ள வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு கண்காட்சிகளில் போட்டியிடும் நாய்கள் மற் றும் பூனைகளில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு தரச் சான்றிதழ் மற்றும் கோப்பைகளும் வழங்கப்படும் என ஒருங் கினைப்பாளர்கள் தெரிவித்தனர். இக்கண்காட்சிகளை ஏரா ளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

;