சென்னை,அக்.26- குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ஆளு நர் பன்வாரிலால் புரோகித், முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ள னர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த நன்னாளில் தமிழக மக்களுக்கு தனது மனங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறி யுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தீப ஒளித் திருநாளான தீபாவளி பண்டி கையை உற்சாகத்துடன் கொண் டாடும் மக்கள் அனைவருக்கும், தனது இதயம் கனிந்த நல் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறி யுள்ளார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ள னர்.
ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தீப ஒளி திரு நாளை, தாம் எப்போதும் வர வேற்பதாகவும் ஒவ்வொருவரோ டும் பகிர்ந்து கொள்ளும் மதிப்பை யும், நம்பிக்கையையும் கொண் டாடுவதால், தீப ஒளி திருநாளை தாம் எப்போதும் விரும்புவதாக வும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.