what-they-told

img

சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து

புதுதில்லி,ஜூன் 25- நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10 ஆம்  வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலை யில் கொரோனா பர வல் தடுப்பு நடவடிக்கை யாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.  இந்நிலையில் தற்போ தைய சூழ்நிலையில் தேர்வு களை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

அந்த  மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது. இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

;