what-they-told

img

பாஜக தலைவர் அண்ணாமலையின் பொய் மழை

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள காது கேட்கும் கருவிகளை பாஜக வழங்குவதாக அண்ணாமலை பெருமிதத்தோடு அறிவித்து வழங்கினார். ஆனால், அந்த கருவி வெறும் 345 ரூபாய் என்பது அம்பலமானதும் ஆள் சரண்டர் ஆனது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சுந்தராபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மொத்தம் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கைக் கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும்போது, “ஒவ்வொரு மெஷினும் 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடிய மெஷின் 95 பேருக்கு வழங்கப்படுகிறது”, என்றார்.

அதில் காது கேளாதோருக்கு Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவி வைக்கப்பட்டிருந்தது.  பாஜக தலைவர் அண்ணாமலை ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன என கூறிய நிலையில், ஆனால், அந்த Cyber Sonic காது கேட்கும் கருவிகள் அமேசானில் ரூ.345-க்கு தான் விற்கபடுகிறது என்பது அம்பலமாகியிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு பிறகு காது கருவிகளை ஆய்வு செய்தபோது, அது சீன தயாரிப்பான அந்த Cyber Sonic காது கேட்கும் கருவிகள் வெறும் ரூ.345-க்கு தான் விற்கப்படுகிறது என்பது அம்பலமானது. இச் செய்தி ரபேல் வாட்சுக்கு இணை யாக வைரலாகியது. அண்ணா மலையின் பொய் மழையின் ரீல் அறுந்தது தெரிந்ததும் ஆள்  சரண்டராகி உள்ளார். இந்நிலையில், தொடர்ந்து அண்ணாமலையின் ஆட்டை பின் தொடரும், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தள பக்கத்தில், 37 வய துக்குள் 2 லட்சம் புத்தகம் படித்துள் ளேன். 9 வருட சர்வீசில் 2 லட்சம் கேஸ், 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச், இன்று, ரூ.345 மெசின் ப10 ஆயிரம் ரூபாய், ஐம்பு லன்களிலும் பெரும் பொய் களே என கலாய்த்துள் ளார். செந்தில் பாலாஜின் இந்த பதிவும் தற்போது  வைரலாகி வருகிறது. கூடு தலாக இணையவாசிகளும்  கலாய்த்து வருகின்றனர்.