what-they-told

img

முதுமலை பகுதியில் புலி தாக்கி வேட்டை தடுப்பு காவலர் படுகாயம்

உதகை, டிச.1- முதுமலை வனப்பகுதியில் புலி தாக்குதலால் வேட்டை தடுப்பு காவலர் ஒருவர் படு காயமடைந்த சம்பவம் அப்பகு தியினரிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள் ளது. நீலகிரி மாவட் டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலி கள், சிறுத்தைகள், கரடிகள், செந்நாய்கள், காட்டெருமை கள், மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காடு பகுதியில் லைட் பாடி, கேம்ப்பாடி, தேக்கம்பாடி ஆகிய பழங்குடியின கிரா மங்கள் உள்ளன. இதில் லைட்பாடி பகுதியைச் சேர்ந்த பொம்மன் (33) என்பவர் முதுமலையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டிலிருந்து சற்று  தூரம் நடந்து சென்றார். அப்போது புதருக்குள் படுத்திருந்த புலி ஒன்று திடீரென பொம்மன் மீது பாய்ந்தது. இதை சற்றும் எதிர்பாராத பொம்மன் கீழே விழுந்தார். தொடர்ந்து புலி அவரை தாக்கியதில், பொம்மனின் தலை, முதுகு, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன்பின் அவர் புலியிடமிருந்து தப்பிக்க அப்பகுதி யில் கிடந்த கட்டையை எடுத்து தாக்க முயன்றார். அப்போது புலி பொம்மனை விட்டு அங்கிருந்து ஓடியது. இதனிடையே சத்தம் கேட்டு வனத்துறையினர் மற்றும் பழங்குடியின மக்கள் ஓடி வந்து படுகாயமடைந்த பொம்மனை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த புலிகள் காப்பக துணை இயக்கு நர் வித்யா, வனச்சரகர்கள் மனோஜ், மனோகரன், வனவர் சந்த னராஜ், காவல் உதவி ஆய்வாளர் ஏசுமரியான் உள்ளிட்டோர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த  சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் வனத்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

;