குவஹாத்தி, ஜூன் 20- அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஆயிரம் பேர் வெள்ளத் தில் தத்தளிக்கின்றனர். வானிலை மையம் இந்த மாவட்டங்களுக்கு செவ்வாயன்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்க ளுக்கு மாநிலத்தில் பல மாவட்டங் களில் ‘மிக கனமான’ முதல் ‘அதிக கனமான’ மழை பெய்யும் என்று கணித்துள்ளது. செவ்வாய், புதன் இரண்டு நாட்களுக்கு ‘ஆரஞ்சு எச்ச ரிக்கை’ மற்றும் வியாழக்கிழமை ‘மஞ்சள் எச்சரிக்கை’யும் விடுத்துள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலா ண்மை ஆணையம் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையில் சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ருகர், கோக்ரஜார், லக்கிம்பூர், நல்பாரி, சோனித்பூர் மற்றும் உதல் குரி மாவட்டங்களில் 30,700-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் மாவட்டத்தில் 22,000-க்கும் அதிகமானோர் பாதிக் கப்பட்டுள்ளனர்,
திப்ருகரில் 3,800 பேரும், கோக்ரஜாரில் 1,800 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 444 கிரா மங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன, அசாம் முழுவதும் 4,741.23 ஹெக் டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன என்று அசாம் மாநில பேரிடர் மேலா ண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பிஸ்வநாத், துப்ரி, திப்ருகர், கோலாகட், காம்ரூப், கரீம்கஞ்ச், கோக்ரஜார், லக்கிம்பூர், மஜூலி, மோரிகான், நாகோன், நல்பாரி, சிவ சாகர், சோனிட்பூர், தெற்கு சல் மாரா, தமுல்பூர், உதல்குரி ஆகிய இடங்களில் மண் அரிப்பு ஏற்பட் டுள்ளது. திமா ஹசாவ், காம்ரூப் பெரு நகர், கரீம்கஞ்ச் ஆகிய இடங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவு கள் ஏற்பட்டுள்ளன. சோனிட்பூர், நாகோன், நல்பாரி, பக்சா, சிராங், தர்ராங், தேமாஜி, கோல்பாரா, கோலாகட், காம்ரூப், கோக்ரஜார், லக்கிம்பூர், திப்ருகர், கரீம்கஞ்ச் மற்றும் உதல்குரி ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கால் சாலைகள், பாலங்கள் சேதமடைந் துள்ளன. பிரம்மபுத்திராவின் கிளை நதியான கம்பூரில் உள்ள கோபிலி யில் வெள்ளம் அபாயக் கட்டத்தைத் தாண்டிச் செல்கிறது.