what-they-told

img

காலத்தை வென்றவர்கள் - யாசர் அராபத் பிறந்த நாள்

யாசர் அராபத், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக செயலாற்றியவர்.  அபூ அம்மார் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட் டார். 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர். யாசர் அராபத், சுயநிர்ணய-பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர் . அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்களாக நிலவிய மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார் .அவற்றின் மத்தியில் முக்கியமானவை - 1991 மாட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்பாடு மற்றும் 2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு. இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012ல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசர் அராபத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின. இத்தகைய இழிசெயல் அமெரிக்க ஏகாதிபத்தியம் செய்ததாகும். இஸ்ரேல் அரசு ஜெருசலேமில் அராபத்தை புதைக்க மறுத்துவிட்டது. மேலும், இஸ்ரேலிய அமைச்சர் டாமி “ ஜெருசலேம் யூத அரசர்களின் புதையிடம் ,அரபு பயங்கரவாதிகளின் புதையிடம் இல்லை ,” என்று கூறினார். பின் அராபத்தின் கல்லறை முசொலியத்தில் பி.என்.ஏ ஜனாதிபதி தலைமையகத்தில்  2007 நவம்பர் 10ல் திறக்கப்பட்டது. ...பெரணமல்லூர் சேகரன்

;