what-they-told

img

சிவப்பு மண்டலத்திற்கு மாறியது திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மே. 4- கொரோனா பாதிப்பு நிலவரப்படி திரு வண்ணாமலை   மாவட்டம் ஆரஞ்சு மண்டல மாக இருந்து வந்தது. தற்போது சென்னை  கோயம்பேடு பகுதியில் இருந்து திரு வண்ணாமலை கிராமப் பகுதிகளுக்கு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், தொடர்ந்து திங்க ளன்று (மே 4) திருவண்ணாமலை மாவட்டம் சிவப்பு மண்டலத்திற்கு மாறி விட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டி ருந்தது. அதில் 10 பேர் குணமடைந்து வீடு  திரும்பிய நிலையில், ஐந்து பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தனர் இந்நிலையில் சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து வந்தவர்கள் திரு வண்ணாமலை மாவட்ட எல்லைப் பகுதி யில் தடுத்து நிறுத்தப்பட்டு, கொரோனா நோய் தொற்று உள்ளதா என ஆய்வு  செய்யப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு  கொரோனா தொற்று  உறுதியானதை தொடர்ந்து, தற்போது பாதிக்கப்பட்ட வர்களின்  எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்  ளது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் சிவப்பு மண்டலமாக இன்று மாறியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார்.