what-they-told

img

தில்லி வெறியாட்டத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆனது

ராணுவத்தை அழையுங்கள் - சிபிஎம் வலியுறுத்தல்

புதுதில்லி, பிப்.26- தில்லியில் நடைபெற்றுள்ள மதவெறியர் களின் வன்முறை வெறியாட்டத்தை கட்டுப்படுத்துவதில் தில்லி காவல்துறை தோல்வியடைந்துவிட்டது என்றும், ராணுவம் உடனடியாக அழைக்கப்பட வேண்டும் என்றும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி யிருக்கிறது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த மூன்று நாட்களாக வடகிழக்கு தில்லியில் நடைபெற்றுள்ள மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தன் ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறது. மதவெறி மோதல் களை உருவாக்குவதற்காகவே வந்திருந்த குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்கு தல்களின் விளைவாக 21 பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள், நூற்றுக்கும் மேலானவர்கள் காயங்கள் அடைந்திருக்கிறார்கள்.  காயம் அடைந்தவர்களிலும், இறந்தவர்களிலும் பெரும்பகுதியினர் துப்பாக்கிக் குண்டுகளால் சுடப்பட்டிருப்பதைக் காணும்போது, இதனை மேற்கொண்டவர்கள் சமூக விரோத சக்திகளும், கிரிமினல்களும்தான் என்பதைக் காட்டுகின்றன. கடைகள், மார்க்கெட்டுகள், வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கின்றன. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எவ்விதமான குற்றவுணர்வுமின்றி இவற்றில் ஈடுபட்டிருக்கின்றனர்.  

திங்கள்கிழமை (பிப்ரவரி 24) காலையி லிருந்தே வன்முறைத் தாக்குதல்கள் நடை பெற்று வருகின்றபோதிலும், இப்போதுவரை, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினரால் முடியவில்லை. மாறாக,  வன்முறை வெறியாட்டங்கள் புதிய பகுதி களுக்கும் பரவி இருக்கின்றன. காவல்துறை யினரின் பங்கு உண்மையில் மிகவும் அதிர்ச்சி யளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது. சில இடங்களில் அவர்கள் கலவரங்களைத் தடுத்திடுவதற்காகத் தலையிடாது வெறுமனே பார்வையாளர்களாக மட்டும் நின்றுகொண்டி ருந்திருக்கின்றனர்.  பல இடங்களில், காவல்துறையினர் குண்டர் கும்பலுக்கு உடந்தை யாக இருந்து உதவி செய்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

புதனன்று உச்சநீதிமன்றமே காவல்துறை யினர்மீது கடுமையான முறையில் விமர் சனத்தை முன்வைத்திருப்பதிலிருந்து காவல் துறையினரின் தோல்வி அப்பட்டமாகத் தெரி கிறது. தில்லி உயர்நீதிமன்றமும் தன் ஏற்பின்மையை வெளிப்படுத்தி இருக்கிறது.   தில்லி காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேரடிப் பொறுப்பாகும். உள்துறை அமைச்சர் அமித் ஷா, திட்டமிட்டு நடைபெற்ற வன்முறையை, தன்னெழுச்சியாக நடந்ததாகக் கூறித் தட்டிக்கழிக்கப் பார்க்கிறார். வன்முறை வெறியாட்டங்கள் தன்னெழு ச்சியாக ஏற்படவில்லை. (பிப்ரவரி 23) ஞாயிறு அன்று பாஜக தலைவர் கபில் மிஷ்ரா, ஜஃப்ராபாத்தில் மூத்த காவல்துறை அதிகாரியின் முன்னாலேயே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடு கிறவர்களை அப்புறப்படுத்திட அச்சுறுத்தி, ஆத்திரமூட்டும் விதத்தில் உரையாற்றி இருக்கிறார். எனினும், காவல்துறையினர் நிலைமையைச் சந்தித்திட எவ்விதத் தயாரிப்புப்பணிகளையும் செய்திடவில்லை.

வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட கயவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமானால், நிர்வாகத்தினருக்கு உதவி புரிந்திட ராணுவம் வரவழைக்கப்பட வேண்டும். இது ஒன்றுதான், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஒரே வழியாகும். வன்முறை வெறியாட்டங்களில் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு கள் வழங்கப்பட வேண்டும், காயமுற்ற வர்களுக்கும் உரிய இழப்பீடுகள் அளிக்கப்பட வேண்டும். அமைதியை நிலைநாட்டிட அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. அமைதிப் பேரணிகள் நடத்திடவும், நிவாரணம் மற்றும் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளவும் அமைதியை நேசிக்கும் அனைத்து சக்திகளுடனும் கட்சி கைகோர்க்கும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.