கோவை, ஜூலை 10 – கோவையில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 ஆயி ரத்தை கடந்த நிலையில், மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் திட்டமிட்டு எண்ணிக்கையை குறை த்துச் சொல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் மின் னல் வேகத்தில் அதிகரித்து வரு கிறது. தற்போது வரை இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் என சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ அறி விப்பின்படி மட்டும் 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், உண்மையில் இந்த எண் ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், மக்களிடம் அச்ச உணர்வு மேலோங்கிவிடக்கூடாது என்பதற்காக பாதிப்பின் எண் ணிக்கை குறைத்துக்காட்டப்படுவ தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கொரோனா தொற்று பாதித்த சில வசதிபடைத்தவர்கள், வீட்டில் இருந்தே மருத்துவ வசதி களை ஏற்படுத்திக் கொண்டுள்ள னர். அவர்கள் யாரும் இந்த கணக் கில் கொண்டுவரப்படவில்லை என வும் கூறப்படுகிறது.
இடப்பற்றாக்குறை
முன்னதாக, கோவையில் கொரோனா பாதிப்பிற்குள்ளா னோர் சிங்காநல்லூரிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், தற்போது அம்மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை அதி கரித்ததால் இடப்பற்றாக்குறை ஏற் பட்டது. இதையடுத்து கோவை கொடிசியா வளாகத்தில் 400 படுக்கை வசதிகளுடன் புதியதாக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. கொரோனா தொற்று அறிகுறியுடன் வருபவர் கள் இங்கு கண்காணிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொடி சியாவில் பிரத்தியோக ஏற்பாடு களை மாவட்ட நிர்வாகம் செய்த ஒரிரு நாட்களிலேயே 200க்கும் மேற்பட்டோர் கொரோனா அறி குறிகளுடன் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
அதிகரிக்கும் உயிரிழப்பு
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களாக கோவையில் கொரோனா தொற்று பாதித்தவர்க ளின் உயிரிழப்புகள் அதிகரித்து வரு கின்றன. வியாழனன்று ஒரு நாளில் மட்டும் கோவை இ.எஸ்.ஐ மருத்து வமனையில் 6 பேர் பலியான சம்ப வம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. இதில், கோவை வர தராஜபுரத்தைச் சேர்ந்த 43 வயது ஆண், சூலூர் கலங்கல் சாலை ஸ்ரீநகரைச் சேர்ந்த 58 வயதான ஆண் மற்றும் கணபதி ஸ்ரீலட்சுமி நகரைச் சேர்ந்த 72 வயதான மூதாட்டி ஆகியோர் அடுத்த டுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந் தனர். இதனால் கோவை மாவட் டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர்.
வார்டுதோறும் பரிசோதனை
கோவை மாவட்டத்தில் இது வரை 68 ஆயிரம் பேருக்கு பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட் டுள்ள நிலையில், பாதிப்பு அதிக முள்ள 31 பகுதிகள் கட்டுப்படுத்தப் பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதும் காவல்துறை யினர் மற்றும் சுகாதாரத் துறை யினர் தீவிர கண்காணிப்பை மேற் கொண்டு வருகின்றனர். மேலும் சமூக பரவல் உருவாகியுள்ளதாக என்பதை கண்டறிய வியாழனன்று ஒரே நாளில் கோவை மாநகராட் சியின் 100 வார்டுகளிலும் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதுபோன்று மாவட்டத்தின் பல பகுதிகளில் என ஒரே நாளில் 2500 பரிசோத னைகள் மேற்கொள்ளப்பட்டுள் ளது. இதன் முடிவுகள் சனியன்று வெளிவரும் என கூறப்படுகிறது. இதேபோன்று வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்க ளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், அவர்களை தனி மைப்படுத்தி கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது வரை கொரோனா தொற்றின் கார ணமாக தனிமைப்படுத்தப்பட்ட 35 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுள்ள னர். தற்போது மாவட்டத்தில் 7 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில் கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி வெள்ளி யன்று நேரில் ஆய்வு செய்து அதி காரிகளுக்கு உரிய உத்தரவை பிறப் பித்தார்.
விமான பயணிகளுக்கு பரிசோதனை நிறுத்தம்
கோவை பன்னாட்டு விமானத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமா னங்கள் வந்து செல்கின்றன. வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை, விமான நிலையத்திலேயே செய்யப்படுகிறது. அதேசமயம் உள்நாட்டு விமான பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கொரோனா பரிசோதனைகள் தற் போது நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக, விமா னத்தில் வரும் உள்நாட்டு பயணிகளின் விப ரங்களை சேகரிக்கும் சுகாதாரத்துறை அதி காரிகள், பயணிகளின் கையில் தனிமைப் படுத்துவதற்கான சீல் மட்டுமே வைக்கின்ற னர். இதன்பின் அவர்களை வீடுகளில் தனி மைப்படுத்திக் கொள்ளவும், தனிமைப்ப டுத்தி இருக்கும்போது அறிகுறிகள் இருந் தால் கொரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் 500க் கும் மேற்பட்டோர் தில்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மூலம் கோவை வருகின்ற னர். இச்சூழலில் பரிசோதனை நிறுத்தப் பட்டு இருப்பதால் விமான பயணிகளின் மூலம் மேலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன.
நகைக்கடையில் 15 பேருக்கு கொரோனா
கோவை காந்திபுரம் நூறடி சாலையில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் என்ற பிரபல நகைக்கடை செயல் பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு வியாழனன்று கொரோனா தொற்று உறுதியனாது. இதையடுத்து அந்த நகைக்கடை, பூட்டப் பட்டது. இதனிடையே அக்கடையில் பணியாற்றும் ஊழியர் கள் தங்கியிருந்த விடுதியில் 42 பேருக்கு, மருத்துவ பரிசோ தனை நடத்தப்பட்டது. இதில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதைய டுத்து அவர்கள் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த கடையில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
பிபிஇ கிட்டை கவ்விச்சென்ற நாய்
கோவை கொடிசியா வளாகத்தில் 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் கடந்த திங்கட்கிழமை முதல் செயல் பாட்டுக்கு வந்தது. தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த மையத் தில் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் பிபி கிட் என்கிற ஆடையை பயன்படுத்தி வருகின்றனர். இது ஒருமுறை மட் டுமே பயன்படுத்தப்பட்டு பிறகு அழிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆடைகள் முறை யாக அழிக்கப்படாமல் அலட்சியமாக கையா ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆங் காங்கே பிபிஇ கிட் ஆடைகள் தூக்கி வீசப்படுவ தால், அவற்றை நாய்கள் தூக்கி கொண்டு கொடிசியா வளாகத்தில் வளம் வரும் சம்ப வங்களும் நடைபெறுகின்றது. காற்றில் கூட கொரோனா தொற்று பரவும் என ஆய்வுகள் வெளிவருகிற நிலையில், இந்த ஆடைகள் அலட்சியமாக வெளியில் வீசிச்சென்ற சம்ப வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்து வர்கள் மற்றும் சுகாதார துறையினர் பயன்ப டுத்தும் இந்த ஆடைகளை உரிய வழிகாட் டுதல்படி அழிக்க தனியாக ஊழியர்களை நிய மித்து மாவட்ட சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந் துள்ளது.