what-they-told

img

தீபாவளிக்காக 26-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை,அக்.10- தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை யன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு  சென்று குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாட ஏதுவாக, கூடுதல் நாட்கள் விடுமுறை வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரி யர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26 ஆம் தேதி விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல, 28 ஆம் தேதியன்று விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி கள் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்றும், அதற்கு பதிலாக சனிக்கிழமை வேலை  நாளாக செயல்படலாம் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.