நாகர்கோவில், மார்ச்.29- குமரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது கர்ப்பிணி பெண் கடந்த 20 ஆம் தேதி துபாய் நாட்டில் இருந்து ஊர் திரும்பினார். இந்தநிலையில், கரோனா குறித்த பரிசோதனைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந் தார். அவர் 34 வாரகால கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஞாயிறன்று (மார்ச் 29) அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். எனினும் தாய் மற்றும் குழந்தையின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு 34 வாரங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்த தால் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.