what-they-told

img

மின் இணைப்பு கட்டணம் பல மடங்கு உயர்ந்தது

சென்னை, அக். 5- மின்வாரியம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின்வாரியம் வீடு மற்றும்  கட்டிடங்களுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்க பல்வேறு விதமான  கட்டணத்தை வசூலிக்கிறது. புதிதாக மின் இணைப்பு பெறுவோர் மின் இணைப்பு கட்டணம், மீட்டர் வைப்புத் தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்ட ணம், வைப்புத் தொகை ஆகியவற்றை  செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள்  ஒரு முறை மட்டுமே வசூலிக்கப்படு கிறது. மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் உள்ளது. இந்த நிலையில் மின்வாரியம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று மின் இணைப்பு வழங்குவதற் கான கட்டணத்தை உயர்த்தி, ஆணையம் உத்தரவிட்டது. வெள்ளி இரவு இதற்கான உத்தரவு வெளியிடப்பட்டது.

மின் இணைப்புக்காக பல்வகை கட்ட ணமாக ரூ.1,600 வசூலிக்கப்பட்டது. தற்போது இது பல மடங்கு உயர்ந்து  ரூ. 6 ஆயிரத்து 480 அதிகரிக்கப் பட்டுள்ளது. இது தாழ்வழுத்த ஒரு முனை மின்சார கட்டணமாகும். இதற்கு வைப்புத் தொகை ரூ.250-ல்  இருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. பதிவு கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ. 100 ஆகி இருக்கிறது. மீட்டர் வைப்பு கட்ட ணம் ரூ.600, வளர்ச்சி கட்டணம் சென்னைக்கு ரூ.400-ல் இருந்து ரூ.5 ஆயி ரம் ஆக உயர்ந்துள்ளது. மற்ற பகுதி களுக்கு ரூ.1, 400 வசூலிக்கப்படுகிறது. வைப்புத் தொகை ரூ.200. இதன் மூலம் சென்னைக்கு மின் இணைப்பு கட்டணம் ரூ.1600-ல் இருந்து ரூ. 6 ஆயிரத்து 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு ரூ.1,600-ல் இருந்து ரூ.2,800 ஆகி இருக்கிறது. இவைதவிர மும்முனை இணைப்பு மற்றும் மற்ற பிரிவுகளுக்கான மின் இணைப்பு கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மும்முனை இணைப்புக்கான கட்ட ணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 முதல் ரூ.1000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வளர்ச்சி கட்டணம் ரூ.1,400 முதல் ரூ.2,500 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி நிறுவனங்கள், வழி பாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக தலங்களுக்கு மும் முனை மின் இணைப்பு ரூ.750-ல் இருந்து  ரூ.1,000 மாக உயர்த்தப்பட்டு இருக்கி றது. விசைத்தறி, குடிசை தொழில் களுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750  ஆகி இருக்கிறது. இணைப்பு தவிர,  வைப்புத் தொகை, வளர்ச்சி கட்டணங்க ளும் உயர்த்தப்பட்டுள்ளன.