புதுதில்லி,செப்.11- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த 21-ஆம் தேதியன்று கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளர் பெருமாளிடம் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், தில்லியில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.