சென்னை,ஆக. 17 பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- பேருந்துகள், சிற்றுந்துகள் ஆட்டோ ரிக்ஃஷாக்கள், ஷேர் ஆட்டோக்கள் மற்றும் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக வேகமாகவும், அனுமதிக்கப் பட்ட நபர்களை விட அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் முதல் முறை குற்றத்திற்கு ரூ.400 அபராதமும் இரண்டாவது முறை குற்றத்திற்கு ரூ.1000 அபராதமும், மேலும் இவ்வாகனத் தின் உரிமையாளருக்கு வேகமாக ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக ரூ.300, மறுமுறை அதே குற்றம் இழைக் கப்பட்டால் ரூ.500 அபராதமும் விதிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. அது போல் அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாக னம் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வகை குற்றங்க ளுக்கு முதலில் குற்றம் செய்த நாளிலிருந்து மூன்று வரு டங்களுக்குள் அதே குற்றத்தை இரண்டாவது முறை மற்றும் அதற்கடுத்த முறைகளில் செய்தால், இரண்டு வருடங்கள் சிறைதண்டனை அல்லது ரூ.2000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப் பட்டு இருக்க வேண்டும். போக்குவரத்து துறை அதிகாரி களின் தணிக்கையின் போதோ அல்லது தகுதிச் சான்று பெற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், பகுதி அலுவலகங்களுக்கு வரும் போதோ வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாமலோ, அல்லது அக்கருவி இயங்கா மல் உள்ளதோ கண்டறியப்பட்டால் அவ்வாகனத்தின் அனு மதிச்சீட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்த ஊர்திகள் அனுமதிச்சீட்டின் படி, அனு மதிக்கப்பட்ட நபர்களை விட அதிக ஆட்களை ஏற்றிச் செல்லும் நபருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிப்பது மற்றும் அனுமதிச்சீட்டின்மீது நடவடிக்கை எடுக்கும் குற்ற மாகும். மேலும் பேருந்துகளில் அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதற்கு அனுமதிச் சீட்டுக்கு தற்காலிக தடை, அதிகபட் சம் 30 நாட்கள் அல்லது ரூ.9000 வரை இணக்க கட்ட ணம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்படும் விபத்துகளில் பெரும்பாலா னவை வாகனங்களின் அதிகவேகத்தாலும், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட நபர் களைவிட அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாலும் ஏற்படு கிறது. எனவே, அவ்வகை வாகனங்களின் அனுமதிச் சீட்டின் மீது நடவடிக்கையும், அவ்வாகனத்தை இயக்கிய ஓட்டுநரின் உரிமத்தினை மூன்று மாதங்களுக்கு குறை யாமல் தற்காலிக தகுதியிழப்பும் செய்யப்படும். இதுதொடர்பாக போக்குவரத்து துறையின் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது. மேற்காணும் குற்றங்கள் கண்டறியப்பட்டால், மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி நடவ டிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்த மாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க விரும்பி னால் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலை பேசி எண்.1800 425 5430 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.