what-they-told

img

கிராமப்புறங்களில் கடந்த 15 ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகள் சதவீதம் அதிகரிப்பு

சென்னை, பிப். 25- தமிழக கிராமப்புறங்களில் கடந்த 15 ஆண்டுகளில்  நீரிழிவு நோயாளிகளின் சதவீ தம் பெருமளவில் அதிகரித்துள்ளதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை -  டண்டீ பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய `டிரெண்ட்’ கிராமப்புற நீரிழிவு திட்ட  ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25  கிராமங்களில் உள்ள 15 ஆயிரம் பேருக்கு  நீரிழிவு பரிசோதனை செய்ய முடிவு செய்யப் பட்டது. இந்த திட்டத்திற்கு `டிரெண்ட்’ என்னும் தமிழக கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் மற்றும் அதன் சிக்கல்களைத் தீர்ப்ப தற்கான டெலிமெடிசின் திட்டம் என்று பெய ரிடப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை 8 ஆயி ரம் பேருக்கு நீரிழிவு பரிசோதனை செய்யப்  பட்டுள்ளது.  கிராமப்புறங்களில்  நீரிழிவு மற்றும் அதன் காரணமாக ஏற்படும் சிக்கல் களை கண்டறிந்து, அதற்கான தகுந்த தீர்வு வழங்குவதே டிரெண்ட் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை  தலைவர் டாக்டர்  மோகன் கூறினார்.

நீரிழிவு நோயாளிகள் அரிசி உட்கொள்  வதை பெருமளவு தவிர்த்து காய்கறி களை அதிகளவில் உணவில் சேர்த்துக்  கொள்ளவேண்டும்,மேலும் யோகா, மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றா லும் நோயை கட்டுக்குள் வைத்திருக்கமுடி யும். நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும்இந்த உணவுமுறையும் பயிற்சியும் அவசியம் என்றார் மோகன். அவர் மேலும் கூறுகையில், கிராமப்புற மக்களிடையே, நோய் கண்டறிதல், வழக்க மான சோதனைகள் மற்றும் தொற்று நோயற்ற நோய்களான குறிப்பாக நீரிழிவு நோயை தடுப்பதற்கான வழிகள் குறித்த விழிப்பு ணர்வு மிகக் குறைவாகவே உள்ளது. டிரெண்ட்  திட்டத்தின் மூலம் புதிய மருத்துவ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த சவால்களை எதிர்கொள்வதை மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும், டண்டீ பல்க லைக்கழகமும் முக்கிய குறிக்கோளாக கொண்  டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம், தொலை தூர பகுதிகளில்கூட நோய் கண்டறிதல் மற்றும் அதற்கான தரமான சிகிச்சை அளிக்க  முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.