சென்னை,டிச.25- சென்னையில் கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. 5 ரூபாய், 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் கடந்த சில மாதங்களாக கிடுகிடு என உயர்ந்து ஒரு முருங்கைக்காய் 30 ரூபாய், 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400 முதல் ரூ.600 வரை சென்றது. தமிழகத்தில் ஒட்டன்சத்திரம், ஸ்ரீவைகுண் டம், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி உள்பட பல இடங்களில் இருந்து முருங்கைக்காய் சென்னைக்கு விற்ப னைக்கு வருவது வழக்கம். கடந்த 3 மாத மாக விளைச்சல் குறைந்ததால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து சென்னைக்கு முருங்கைக்காய் கொண்டு வரப்பட்டது. உள்ளூர் முருங்கைக்காய் வரத்து இல்லா ததால், வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட முருங்கைக்காய் விலை தொடர்ந்து அதிகமாகி வந்தது. ஆனால் இப்போது ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் பகுதி களில் இருந்து அதிக அளவில் முருங்கைக் காய் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்தொடங்கி உள்ளது. இதன் காரண மாக முருங்கைக்காய் விலை ‘கிடுகிடு’ என குறைந்து வருகிறது. 30 ரூபாய், 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு முருங்கைக்காய் விலை இப்போது 20 ரூபாய்க்கு குறைந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு வியாபாரி கள் கூறுகையில், “கோயம்பேடு மார்க் கெட்டுக்கு இதற்கு முன்பு 10 வேன், 5 லாரி களில் முருங்கைக்காய் வரும். தட்டுப்பாடு காரணமாக 2 வேன், 2 லாரிகளில் மட்டும் முருங்கைக்காய் வந்தது. ஆனால் இப்போது மீண்டும் 4 லாரி, 10 வேன்களில் முருங்கைக் காய் வருகிறது. இதனால் விலை குறைந்து வருகிறது. பொங்கல் சமயத்தில் இன்னும் விலை குறைந்து விடும்.” என்றார்.