what-they-told

img

பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் தொடரும்

சென்னை, பிப். 17 - விவசாயத்திற்கான இலவச மின்சார இணைப்பு வழங்குவது தொட ரும் என்று மின்துறை அமைச்சர் கே. தங்கமணி கூறினார். சட்டப்பேரவையில் திங்களன்று (பிப்.17) திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த அமைச்சர், தலா 10ஆயிரம் இணைப்புகள் இல வசமாகவும், தட்கல் முறையிலும் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

உறுப்பினர்கள் தங்கம் தென்னரசு, கு.பிச்சாண்டி ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்  கோட்டையன், “சட்டமன்றத் தொகுதி  வாரியாக எந்தெந்த பள்ளிகள் நிலை  உயர்த்த வேண்டும் என்று கணக் கெடுக்கப்பட்டுள்ளது. அவற்றை முத லமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். “பள்ளிகளை நிலை உயர்த்த பொதுமக்களின் பங்களிப்பாக 2 லட்  சம் ரூபாய் வரை வழங்க வேண்டி யதை ரத்து செய்ய பரிசீலிக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

காலணி தயாரிப்பு ஆலை

மயிலம் தொகுதி திமுக உறுப்பி னர் இரா. மாசிலாமணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தொழில்  துறை அமைச்சர் எம்.சி.சம்பத், “விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அல்லது வானூர் பகுதியில் சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி முதலீட்டில் காலணி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று புதிதாக துவங்கப்படும். இதற்காக தைவான் நாட்டு நிறுவனம் இடத்தை தேர்வு செய்துள்ளது. இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். கிராமங்களில் விவசாயிகள் சாகுபடிசெய்யும் சவுக்கு மரங்களை பயன்படுத்தி மரக்கூழ் தயாரிக்கும் ஆலை துவங்குவதற்கு ஏற்கெனவே  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.