what-they-told

எல்லா சின்னத்துக்கும் ஒரு குத்து!

விழுப்புரம்,அக்.12- தமிழ்நாட்டில் காஞ்சி புரம், செங்கல்பட்டு, வேலூர்,  திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட் டங்களில் கடந்த 6 மற்றும்  9 ஆம் தேதிகளில் 2 கட்டங்க ளாக ஊரக உள்ளாட்சி தேர்தல்  நடைபெற்றது. தேர்தலில் பதி வான வாக்குகள் அனைத்  தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அக்டோபர் 12 ஆம் தேதி  காலை 8 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம், 16 வது மாவட்ட கவுன்சிலர் வாக்கு சீட்டை  பிரிக்கும் போது, அங்கு இருந்த அதிகாரிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர், வாக்காளர் வாக்குச் சீட்டில் இருந்த 5 சின்னங்க ளில் நான்கு சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வாக்கு வள்ளல் என நிருபித்து காட்டியிருந்தார். வடிவேலு பட காமெடி போல... கொடுத்த வாக்கை காப்பாற்ற “தென்னைமரத்துல ஒரு குத்து... ஏணியில ஒரு  குத்து” என வாக்குச் அனைத்து சின்னங்களுக்கும் வாக்க ளித்துள்ளது இதுதொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்  களில் வைரலாகி வருகிறது.