what-they-told

img

இளம் வயதிலேயே கருவுறுதல் விகிதம் இந்தியாவில் அதிகரிக்கிறது

புதுதில்லி, ஆக. 2- இந்தியாவில் முழுவதும் கருவுறுதல் விகிதம் நிலையானதாக இருந்தாலும், சில பகுதிகளில் அதிக டீன் ஏஜ் கருவுறுதல் கவலைக்குரியதாக உள்ளதாக குடும்பக் கட்டுப்பாடு விஷன்-2030 ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது. குழந்தைத் திருமணம் மற்றும் டீன் ஏஜ் கருவுறுதல் 118-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பதின்ம வயதினர் கருவுறுதல் சதவீதம் அதிகமாக உள்ளது, பெரும்பாலும் பீகார் (19), மேற்கு வங்கம் (15), அசாம் (13), மகாராஷ்டிரம் (13), ஜார்க்கண்ட் (10), ஆந்திரப் பிரதேசம் (7) மற்றும் திரிபுரா (4) ஆகிய மாநிலங்களில் உள்ளன.  இரண்டாவது பெரிய நாடு இந்தியாவின் மக்கள்தொகை நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மக்கள்தொகை வளர்ச்சி கணிசமாகக் குறையும். இந்தியாவின் மக்கள்தொகை 136.3 கோடியை (1.36 பில்லியன்) எட்டியுள்ளது.  2031-ஆம் ஆண்டில் 147.9 கோடியை (1.47 பில்லியன்) எட்டும். 2036-ஆம் ஆண்டில் மேலும் 152.2 கோடியை (1.52 பில்லியன்) எட்டும். 2031-ஆம் ஆண்டு வாலிபப் பருவத்தினர் 22.9 கோடி (229 மில்லியன்) ஆகவும், 2036-ஆம் ஆண்டில் மேலும் 22 கோடியாகவும் (220 மில்லியன்) உயரும்’’ என்று ஆவணம் கூறுகிறது.