what-they-told

img

இனிப்பவர் அம்மா! - கோவி.பால.முருகு

உள்ளக் கோயிலில் ஓங்கி யிருப்பாள்
உலகம் போற்றும் வாழ்த்தி லிருப்பாள்
கொள்ளை இன்பம் கொடுத்து மகிழ்வாள்
கோபுரம் போல உயர்ந்து நிற்பாள்!

தெய்வம் என்ற சொல்லி லிருப்பாள்
தேடும் தெய்வம் அவளா யிருப்பாள்!
தொய்வே இல்லாக் கருணையி லிருப்பாள்
தோய்ந்திடும் அன்பின் கடலா யிருப்பாள்!

செல்வம் அனைத்தும் கொடுத்து மகிழ்வாள்
சேர்ந்திடக் கல்வி ஞானம ளிப்பாள்!
சொல்லில் அமிழ்தச் சுவையினைக் கொடுப்பாள்
சோர்விலா உழைப்பின் பொருளா யிருப்பாள்! 

உண்ண உணவை ஊட்டி மகிழ்வாள்
உறங்கச் செய்யத் தாலாட் டிடுவாள்!
கண்ணை இமைபோல் காத்துக் கிடப்பாள்
கருத்தில் இனிக்கும் கவியாய் இருப்பாள்!

அம்மா வென்ற சொல்லில் இருப்பாள்
அகிலம் போற்றும் உறவில் சிறப்பாள்! 
இம்மா நிலத்தின் இயக்கமே அவள்தான்
எங்கள் உயிராய் இனிப்பவர் அம்மா!

உள்ளக் கோயிலில் ஓங்கி யிருப்பாள்
உலகம் போற்றும் வாழ்த்தி லிருப்பாள்
கொள்ளை இன்பம் கொடுத்து மகிழ்வாள்
கோபுரம் போல உயர்ந்து நிற்பாள்!

தெய்வம் என்ற சொல்லி லிருப்பாள்
தேடும் தெய்வம் அவளா யிருப்பாள்!
தொய்வே இல்லாக் கருணையி லிருப்பாள்
தோய்ந்திடும் அன்பின் கடலா யிருப்பாள்!

செல்வம் அனைத்தும் கொடுத்து மகிழ்வாள்
சேர்ந்திடக் கல்வி ஞானம ளிப்பாள்!
சொல்லில் அமிழ்தச் சுவையினைக் கொடுப்பாள்
சோர்விலா உழைப்பின் பொருளா யிருப்பாள்! 

உண்ண உணவை ஊட்டி மகிழ்வாள்
உறங்கச் செய்யத் தாலாட் டிடுவாள்!
கண்ணை இமைபோல் காத்துக் கிடப்பாள்
கருத்தில் இனிக்கும் கவியாய் இருப்பாள்!

அம்மா வென்ற சொல்லில் இருப்பாள்
அகிலம் போற்றும் உறவில் சிறப்பாள்! 
இம்மா நிலத்தின் இயக்கமே அவள்தான்
எங்கள் உயிராய் இனிப்பவர் அம்மா!