what-they-told

img

சந்தேகம் சாமிக்கண்ணு

மத்திய அமைச்சர் அமித் ஷா :- நான் என்ன தவறாகப் பேசிவிட்டேன் என்று எனக்குப் புரியவில்லை.
ச.சா - ஒட்டுமொத்த அமைச்சரவையே என்ன பேசுறதுன்னு தெரியாமத்தான பேசுது..!!
**********
யோகா ஆசிரியர் ஜக்கி வாசுதேவ் :- பைக் ஓட்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது.
ச.சா - காட்ட ஆக்கிரமிக்குறதுல மும்முரமா இருந்ததுனாலயா..??
**********
கர்நாடக பாஜக எம்.பி. நாராயணசாமி :- நான் தலித் என்பதால் பெம்மணஹள்ளி கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
ச.சா - உங்க கட்சி வாயத் திறக்கலையே..??
**********
பாமக நிறுவனர் ராமதாஸ் : - எனக்குப் பதவி ஆசையிருந்தால் இந்நேரம் ஆளுநர் ஆயிருப்பேன்.
ச.சா - யாருக்கோ கோடிட்டுக் காட்டுறாரோ..??