what-they-told

img

42 ஆண்டுகளுக்குப் பின் கண்டறியப்பட்டுள்ள நம்தாபா பறக்கும் அணில்

அருணாச்சலப் பிரதேசத்தில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன இரவு நேரத்தில் பறக்கும் அணில் ஒன்று மீண்டும் தோன்றியுள்ளது.  1981-ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து மட்டுமே அறியப்பட்ட இந்த இரவு நேர அனில் வருகை வன சுற்றுச்சூழல ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டு அஸ்ஸாமைச் சேர்ந்த பல்லுயிர் பாதுகாப்புக் குழு ஒன்று 79 நாட்கள் பத்து இடங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஃபிரோஸ் அஹமது தலைமையிலான குழுவில் இடம் பெற்ற கள ஆய்வாளர் சௌரவ் குப்தா, தன்னார்வலர் சௌரவ் மார்டி, வனத்துறையின் ஆராய்ச்சி அதிகாரி தாஜூம் யோம்சா தலைமயிலான குழு நம்தாபா என பெயரிடப்பட்ட பறக்கும் அணிலைப் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்த்துள்ளது.  ஃபிரோஸ் அஹமது கூறுகையில், “நாங்கள் ஒரு மரத்தின் மேல் ஒரு சிறிய சிவப்பு மற்றும் கருப்பு உரோமம் கொண்ட பாலூட்டியைப் பார்த்தோம். புகைப்பட ஆதாரங்களின் படி “நம்தாபா” பறக்கும் அணிலாக இருக்கலாம் என்று கூறினாலும், அதை உறுதிப்படுத்துவதற்கு டிஎன்ஏ பகுப்பாய்வு செய்ய வேண்டியது அவசியம். இவரது குழுவினர் தற்போது டிஎன்ஏ மாதிரிகளைச் சேகரித்து, கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் ஆய்வகத்தில் 1981-ஆம் ஆண்டு சேகரிக்கப்பட்டுள்ள மாதிரியுடன் ஒப்பிடுவதற்கான ஒரு ஆய்வை மேற்கொள்ள உள்ளனர் என்றனர். மேலும் அவர் கூறுகையில், “42 ஆண்டுகளாக காணாமல் போன ஒரு இனத்தை புகைப்பட ஆதாரங்கள் கூட இல்லாமல், அது குறித்த முழுமையான தகவல்கள் இல்லாமல் நேரடியாகப் பார்ப்பது என்பது வைக்கோல் போரில் தொலைந்து போன ஊசியைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தை பிரதிபலித்து என்றார்.