what-they-told

img

மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.3 ஆயிரம்

மதுரை, செப்.6-  பண்டிகை மற்றும் விசேஷங்க ளால் பூக்கள் விலை மிகவும் அதி கரித்துள்ளது.  தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை யில் பூக்கள் விலை ஒரு வாரமாக அதி கரித்துள்ளது. புதனன்று ஓணம் பண்டிகை மற்றும் தொடர் விசே ஷங்கள் காரணமாக பூக்கள் விலை  உயர்ந்துள்ளது. இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1500 முதல் 1800 ரூபாய்  வரை விலை உயர்ந்து விற்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து  வரும் தொடர் மழை காரணமாக பூக்க ளின் வரத்து குறைந்தது. இதனால் ஒரு  வாரமாக விலை உயர்வு நீடித்து வரு கிறது. தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த நாள் என்பதால் மல்லி கைப்பூ கிலோ 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 50 ரூபாய்க்கு விற்ப னையாகும் சம்மங்கி 250 முதல் 300 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை 1500 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.