what-they-told

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை, அகல் விளக்குகள் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை, ஜூலை2- வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத் தில் நடைபெற்ற அகாழ ய்வின் போது சடுமண் பானை மற்றும்  அகல் விளக்குகள் கண்டுபிடிக்கப் பட்டன. வெம்பக்கோட்டை அருகே உள்ளது விஜய கரிசல்குளம். இங்கு 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 35 ஆண்டுகளுக்கு முன்பே தொல்லியல் சான்றுகள்  கண்டெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வெம்பக் கோட்டையில் முதல் கட்ட அகழாய்வு பணி களுக்காக  தமிழக அரசா னது ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையயடுத்து, கடந்த  ஆண்டு மார்ச் 16ம்தேதி  அமைச்சர் தங்கம்  தென்னரசு முன்னிலையில் அகழாய்வு பணிகள்  தொடங்கப்பட்டது. அகழாய்வுக்காக தோண்டப்பட்ட 15 குழி களில், நுண் கற்காலம் முதல் இடைக்கற்காலம் வரை இப்பகுதியில் மனிதர் கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் கிடைத்தது.  மேலும், தங்க  அணிகலன், சுடுமண்ணா லான முத்திரை, ஆண் உரு வம், சுடுமண்ணாலான சங்க கால முத்திரை, முழு சங்கு வளையல், இருபுறமும் உரு வம் பதித்த செப்பு நாண யம் உள்ளிட்ட மூவாயிரம்  வகையான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆவ ணப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2ம் கட்ட அகழாய்வுப் பணியை கடந்த ஏப்.6இல் முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத் தார். அதனை தொடர்ந்து நடைபெற்று வந்த 2ம்  கட்ட அகழ்வாராய்ச்சியில் தற்போது வரை சுடு மண்ணால் ஆன புகைபிடிப்  பான், கல்லால் ஆன எடைக்கல், செப்புநாண யங்கள், கண்ணாடி மணி கள், சுடுமண் காதணி உள்ளிட்ட 200 வகையான தொன்மையான பொருட் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஞாயி றன்று நடைபெற்ற அகழ்வா ராய்ச்சியில் கருப்பு சிவப்பு நிற சுடுமண் பானை, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட கூம்பு மற்றும் வட்ட வடிவ  அகல் விளக்குகள் கண்டு பிடிக்கப்பட்டது.  இங்கு வாழ்ந்த தொன்மையான மனிதர்கள் மண்பாண்டக் கூடம் அமைத்து கலை நயம்மிக்க மண்பாண்ட பொருட்களை தயாரித் த்திருக்கலாம் என தொல்லி யல் துறையினர் தெரிவித்து ள்ளனர்.

;