what-they-told

img

திருப்பூருக்கு வராதீங்க!? - ஆர்.ஈஸ்வரன், திருப்பூர்

 1.  திருப்பூருக்கு போனால் எப்படியும் பொழச்சுக்கலாம்.
 2.  வந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்.
 3.  மின்கம்பங்கள், தந்தி கம்பங்களில் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரங்கள்.
 4.  எல்லா மாவட்டங்களிலும் திருப்பூருக்கு ‘ஆள் பிடித்துக் கொடுக்க ஏஜெண்டுகள்’!
 5. மாவட்டங்களில் தையல் பயிற்சி கொடுத்து திருப்பூர் அழைத்து வர பயிற்சி மையங்கள்!.
 6.  கலாசி, டையிங், வேன் ஓட்டுநர், அடுக்கி கட்டுதல், பேக்கிங் செக்சன் என அன் ஸ்கில்டு வேலைக்கு எப்பொழுதும் கிராக்கி.
 7.  நாற்பது ஆண்டுகளாக படிப்படியாக வளர்ந்து ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முன்னணி நகரம்.
 8.  பல மாவட்டங்களிலிருந்தும், பல மாநிலங்களிலிருந்தும் குவிந்த தொழிலாளிகள்.
 9.  காடு மேடெல்லாம் தொழிற்சாலைகள், கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு லைன் வீடுகள், காலியிடம் ஏதும் இல்லாத மனைகள் ஆயிரக்கணக்கான மகாலட்சுமி அய்யங்கார் பேக்கரிகள்.
 10.  சனிக்கிழமை இரவு ஊர் திரும்ப பேருந்தில் இடம் இல்லை.
 11.  பண்டிகை காலங்களில் எலெக்ட்ரானிக்கள் கடைகளில் டிவி, பேன், பிரிட்ஜ் வாங்கிவேன் பிடித்து சொந்த ஊர்களுக்கு பெருமையோடு கொண்டு சென்ற மக்கள்.
 12. பத்து வீடுகளுக்கு ஓரே ஆட்டுக்கல், ஓரே அம்மி, இரண்டு பாத்ரூம் இருந்தாலும் பரவாயில்லை கேட்கிற வாடகையை கொடுத்து லைன் வீடுகளில் குடியிருப்பு.

இப்படியிருந்த திருப்பூர் இப்பொழுது எப்படியிருக்கிறது?

 1.  வேலை எப்படியிருக்கிறது என தொழிலாளியிடம் கேட்டால் சரியா வேலை செய்து ஆறு மாதம் ஆகிறது. போன மாசம் பத்து நாள்தான் வேலை, இந்த மாசம் இன்னும் வேலையே செய்யலை.
 2.  உற்பத்தியாளர்களிடம் கேட்டால் நூல் விலை யேற்றத்தால் ஆர்டர் உறுதியாகவில்லை. நாற்பது வருசமாக இப்படி லீவு விட்டதே இல்லை. சில பேரை
 3. ஊருக்கு அனுப்பி விட்டோம். இன்னும் சில உற்பத்தியாளர் சாப்பாடு போட்டு ஆட்களை தங்கவைத்துள் ளோம். ஆர்டர் எப்போ வரும் என்று தெரியவில்லை என்று புலம்புகின்றனர்.
 4.  டீக்கடைகள் தினமும் 40-50 லிட்டர் பால் தீரும் இப்பொழுதே 10-15 லிட்டர் தீருவதே கஷ்டமாக உள்ளது. கடை வாடகை ஆள் சம்பளம் கொடுத்து கட்டுபடியாகவில்லை. இப்படியே போனால் அடுத்த மாதம் கடையை மூட வேண்டியதுதான் என்கின்றனர் டீக்கடை உரிமையாளர்கள்.
 5.  வீடு, நிலம் - விற்க, வாங்க செயல்படும் புரோக்கர்கள்ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வருஷமா ‘ஒண்ணுமே இல்லீங்க’ என்கின்றனர்.
 6.      எங்கு பார்த்தாலும் குடோன் காலி, வீடு வாடகைக்கு விடப்படும் என்ற அறிவிப்புகள்.
 7.  அடகு கடைகளில் கூட பணம் இல்லை என்று கூறுகின்றனர்.
 8.  பெரிய கடைகள், தொழிற்சாலைகள் வியாபாரம் எப்படி என்றால் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா, பஞ்சு, நூல் விலையேற்றம் போன்ற காரணங்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஒப்பிட்டால் தற்போது 40 சதம் கூட இல்லை என்கின்றனர். சிலர் இன்னும் மோசம் என்கின்றனர்.
 9.  திருப்பூரை சுற்றியுள்ள பல்லடம், சோமனூர், அவிநாசி போன்ற இடங்களில் விசைத்தறிக் கூடங்கள் 
 10. மூடிக் கிடக்கின்றன. சிலர் தறியை உடைத்து பழைய இரும்புக்கு போட்டு விட்டனர். ஆட்கள் எல்லாம் கட்டிட வேலைக்கும், கிடைக்கிற வேலைக்கும் போய்க்கொண்டிருக்கின்றனர்.
 11.      ஆர்ப்பாட்டமாய் தொடங்கப்பட்ட சில ஹோட்டல்கள், காபி ஷாப்கள் வாடகை கொடுக்க முடியாமல் ‘ஓடியே’ போய்விட்டனர். மிகப்பெரிய ஜாம்பவான்கள், அவர்களுடைய மார்க்கெட்டை அசைக்கவே முடியாது என்று கூறப்பட்ட
 12. சில பிராண்ட் நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன.
 13.  பல உற்பத்தியாளர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
 14.  உண்மையில் நிலைமை படுமோசமாக உள்ளது. பீதியை கிளப்புகிறார்களோ என்று எண்ணாதீர்கள்.
 15.  எப்பொழுது சீரடையும் என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது.
 16.  ஒரு லட்சம் கோடிக்கு ஏற்றுமதி என்று எட்டு வருஷங்களுக்கு முன்னால் முழக்கமிட்ட பாஜக ஆட்சியாளர்கள் தற்போது ராகுலின் டீ சர்ட் என்ன விலை என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். எந்த 
 17. கோவிலை இடிக்கலாம், எந்த சிலையை வைக்கலாம், யாரை கவர்னராக போட்டால் எதிர்க்கட்சியை சமாளிக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு இதுபற்றி அக்கறை ஏதுமில்லை. ஆகவே வாங்க, வாங்க என்று அழைத்த வர்கள் கூறுகிறோம், நிலைமை சீரடையும் முன் திருப்பூருக்கு வராதீர்கள்.


 

;