what-they-told

img

நச்சுத் தன்மை அதிகமான பூச்சிக் கொல்லி சார்ந்த மரபணு மாற்றக் கடுகு ஆபத்தானது

புதுதில்லி, நவ.18 - மரபணு மாற்றப்பட்ட கடுகு உற்பத்தியை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது என  தவறாக சித்தரிக்கப்படுகின்றது. இந்த செய்திகள் தவறானவை என அகில இந்திய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அசோக் தாவ்லே பொதுச் செய லாளர் ஹன்னன் முல்லா ஆகியோர் கடந்த அக் டோபர் 31 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மரபணு மாற்றப்பட்ட கடுகு உற்பத்தி குறித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் குறிப்பிட்ட கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கடுகு உற்பத்திக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் வேக வேகமாக வரவேற்பு அளித்து விட்டதாக தவ றான கருத்துகளும் பரப்பப்படுகின்றன. இவை தவ றான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை கள் உற்பத்தி மற்றும் ஆய்வுக்கு மரபணு பொறியி யல் மதிப்பீட்டுக்குழு அனுமதி அளித்துள்ளது. வேளாண்துறை வளர்ச்சி, உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைதல் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு அறி வியல் வளர்ச்சி உதவியாக இருக்கும் என்பதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் நம்புகிறது. அதிக விளைச்சல் தரும் கடுகு விதைகளை மேம் படுத்துவது, எண்ணெய் வித்துக்களை சாகுபடி செய்வதற்கு முக்கியமான ஒன்று. இவை, விவசாயி களுக்கு அதிக வருமானத்தையும், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் சார்பையும் குறைக்கும்.

உத்தரவாதமில்லை

ஆனால் இன்றைய நிலையில், இத்தகைய தொழில்நுட்ப தீர்வுகள், கார்ப்பரேட்டுகளுக்குத் தான் அதிக பலனைத் தருகின்றன.  விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு இதன் மூலம் எந்த பலனும் இல்லை என சமீபத்திய அனுபவங்கள் தெரிவிக் கின்றன. பொதுத்துறை வளங்கள் அனைத்தும், விவசாயிகள் விரும்புகிற, மறுஉற்பத்தி செய்யக் கூடிய விதை வகைகளுக்கு மட்டும் பயன்பட  வேண்டுமே தவிர, தனியார் விதை நிறுவனங்க ளின் சார்பை அதிகரிக்கக் கூடாது என விவசாயிகள் சங்கம் கருதுகிறது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த டிஎம்எச் II கடுகு ஒரு கலப்பு விதை. (விதை வகையைச் சேர்ந்தது அல்ல). இதனை விவசாயி கள் ஒவ்வொரு பருவத்திலும் புதிதாக கொள்முதல் செய்ய வேண்டிய நிலை வரும். பொதுத்துறை நிறுவனத்தால் இந்த விதை உருவாக்கப்பட்டிருந் தாலும், இத்தகைய கலப்பு விதைகளை மிகப் பெரும் அளவில் உற்பத்தி செய்வது என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடம் இந்த தொழில்நுட்பம் கைமாற வாய்ப்புள்ளது. இந்த விதைகள், விவசாயி களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் என்ப தற்கு தற்போது வரை நிறுவனரீதியாகவோ, ஒழுங்குமுறை கட்டமைப்பு ரீதியாகவோ எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.

ஆபத்தான அதிக நச்சு  களைக் கொல்லி பயன்பாடு

இயல்பு நிலைகளுக்கு (பெற்றோர் நிலை - parental lines) இடையே குறுக்கு இனப்பெருக் கத்தை எளிதாக்குவதற்காக இந்த டிஎம்எச் II கலப்பு விதைகள் மரபணு மாற்றத்திற்கு உள்ளாக்கப் படுகின்றன. மகசூலை அதிகப்படுத்துவதற்காக இந்த விதைகளில் குழுபோசினேட் (அம்மோனி யம்) போன்ற அதிதீவிர- பிற எந்த தாவரத்தையும் வளரவிடாத அளவிற்கு மண்ணின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்துகிற நுண்கிருமிகளை உருவாக்குகிற களைக் கொல்லி வேதிபொருட்கள் உட்செலுத்தப்படுகிறது. விளைச்சலை மேம்படுத்து வது முக்கியமான ஒன்று. அதே சமயம், களைக் கொல்லி நச்சுடன் கூடிய விதையை அறிமுகப் படுத்துவதை மிக எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம். இந்தியாவில் சமீப ஆண்டுகளாக அதிக நச்சுத்தன்மை கொண்ட களைக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இத்தகைய பலவீன மான கட்டமைப்பு மற்றும் விரிவாக்க முறைகளின் மூலம், களைக்கொல்லி நச்சு ஏற்றப்பட்ட விதை வகைகளை அறிமுகப்படுத்துவது, உணவுப் பயிர்களில் நச்சுத்தன்மை கொண்ட வேளாண் ரசாயனங்களின் பயன்பாட்டை கட்டுப்பாடின்றி ஊக்குவிக்கும் ஆபத்து நிறைந்ததாகும். பூச்சிக் கொல்லிகள் விற்பனை மற்றும் செயல்பாட்டிற் கான சட்ட விதிகள் மிகவும் மோசமான முறையில் செயல்படுத்தப்படுகின்றன. பேயர் (Bayer) போன்ற பன்னாட்டு வேளாண் ரசாயன உற்பத்தி நிறுவனங்கள், பரந்த வலைத்தொடர்பை கொண்ட பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களுடன் ஒன்று சேர்ந்து, விலை உயர்ந்த மற்றும் மிக நச்சுத் தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிகளைப் பயன் படுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும்.

ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

நோய் மற்றும் பூச்சிகளை கையாள்வதற்காக, விலை உயர்ந்த பூச்சிக்கொல்லிகளை விற்பதில் ஆர்வம் கொண்ட இத்தகைய சேவைகள் மிகவும்  மோசமானவை. இதனால் விவசாயிகள், பூச்சிக் கொல்லி விற்பனையாளர்களின் பரிந்துரைகளை மட்டுமே நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். விவசாயிகள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளு க்கு சற்றும் பொருந்தாத பூச்சிக்கொல்லி மருந்து களால், பெரும்பாலும் விவசாயிகள் பெரும் செலவை சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய நச்சுத் தன்மை கொண்ட வேளாண் ரசாயனங்கள், விவ சாயிகளின் ஆரோக்கியத்திற்கும், வேளாண் பணி யாளர்கள் மற்றும் நுகர்வோருக்கும் மிக மோச மான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, இத்தகைய களைக்கொல்லி சார்ந்த வகைகளை ஊக்குவிப்பதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய முழுத் தகவல்களைப் பெறுவது அவசியம்.

மேலும் ஆராய்ச்சி தேவை;  அவசரம் கூடாது

களைக்கொல்லி நச்சு கலக்காமல் உயர் விளைச்சல் தரும் கலப்பினங்கள், தில்லி பல் கலைக்கழக பயிர் செடிகளின் மரபணுக்களை கையாளும் மையத்தால் உருவாக்கப்பட்டதா என்பது பொதுவாக கிடைத்த விபரங்களின் மூலம் தெளிவாக தெரியவில்லை. இத்தகைய விதைகள், நச்சுக்கொல்லிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கா மல் மகசூலை அதிகரிக்க வேண்டும். தேவையிருப் பின், இதுகுறித்து மேலும் ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும். டிஎம்எச் II அறிமுகத்தின் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலம் தொடர்பான பாதிப்புகள் குறித்த சில கேள்விகளையும் விமர்சகர்கள் எழுப்பியுள்ள னர். இந்த சந்தேகங்கள், எவ்வித பாகுபாடும் இன்றி, உறுதியான மற்றும் வெளிப்படையான அறிவியல் சான்றுகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு தெளிவுடன் கையாண்டு, இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். மேலும், மரபணு மாற்றப்பட்ட கடுகை வணிக பயன்பாட்டி ற்கு கொண்டு வருவதில் அவசரப்படக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

;