ஆம்பூர்,டிச. 8- அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு விற்பனை செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன், நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரவி சொந்தமான மட்டு தீவனம் சேமிப்பு கொட்டகையில் 35 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 10 லட்சம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரவி மகன் தென்னரசை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பூவரசனை தேடி வருகின்றனர். மேலும் மாவட்ட முழுவதும் சோதனையை காவல்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.