what-they-told

img

கொச்சியில் மாடலிங் பெண்களின் மரணம்

கொச்சி, நவ.22- முன்னாள் மிஸ் கேரளா உட்பட 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த வழக்கில், அவர்கள் சென்ற காரை பின்தொடர்ந்த சைஜூ தங்கச்சனிடம் விசாரணை குழுவினர் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர். ஓட்டலில் இருந்து காணாமல் போன கணினி ஹார்ட் டிஸ்க்கை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரி ஏ.ஆனந்தலால் ஞாயி றன்று (நவ.21) செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.  இந்த விபத்தில் வி.ஐ.பி.க்கள் மற்றும் திரையுலக பிரமுகர்களின் பங்கைக் கண்ட றிய முடியவில்லை. மாடல்கள் சென்ற வாக னத்தை பின்தொடர்ந்து சென்ற சைஜூவின் வாக்குமூலத்தில் முரண்பாடு இருந்ததால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குண்டனூரில் மாடல் அழகிகளு டன் பேசியதற்கான ஆதாரம் உள்ளது. குடி போதையில் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறவே காரை துரத்திச் சென்றதாக சைஜூ முன்பு காவல்துறையினரிடம் தெரிவித்துள் ளார்.

விபத்துக்குப் பிறகு, ஓட்டல் எண்.18 இன் உரிமையாளர் ராய் ஜே.வயலாட்டை தொடர்பு கொண்டுள்ளார். ஓட்டுநர் அப்துல் ரஹ்மான் குடிபோதையில் காரை அதிவே கத்தில் ஓட்டிச் சென்றதால் வாகனம் விபத்துக் குள்ளானது. எண் 18 ஹோட்டலில் மாடல் கள் இறந்த அன்று விஐபிகள் வந்ததாக கண்ட றியப்படவில்லை. ஓட்டலின் சிசிடிவி காட்சி களை அழித்ததற்காக ராய் மற்றும் ஐந்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சில நாளிதழ்கள், காட்சி மற்றும் இணைய ஊட கங்கள் ஆதாரமற்ற செய்திகளை வெளி யிடுகின்றன என்று ஆனந்தலால் கூறினார். மாடல்களின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி அஞ்சனா ஷாஜ னின் குடும்பத்தினர் கொச்சி நகர காவல்துறை யில் புகார் அளித்துள்ளனர். ஓட்டலை விட்டு  வெளியேறும் வரை அஞ்சனாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சகோதரர் அர்ஜூன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். பயணத்தின் போது குண்டனூர் சந்திப்பில் என்ன நடந்தது என்று கண்டறியப்பட வேண்டும். அங்கு காரை நிறுத்தி பேசுவது போன்ற காட்சிகள் உள்ளன. பின்தொடர்ந்து வந்த ஆடி கார் பின்தொடர்ந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஆடி காரை ஓட்டி வந்த சைஜூ, ஓட்டல் உரிமையாளர் ராய் ஆகி யோரின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும். தற்போதைய காவல்துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக அர்ஜூன் கூறினார்.

வன்பொருள் தேடும் பணி தொடங்கியது

கொச்சியில் கார் விபத்தில் மாடல் பெண்கள் உயிரிழந்த வழக்கில் ஏரியில் வீசப்பட்ட கணினி வன்பொருள் (ஹார்ட் டிஸ்க்) தேடும் பணி திங்களன்று தொடங்கியது. ஸ்கூபா டீம் மூலம் கண்ணங்காடு ஏரியில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.  ஹார்ட் டிஸ்க் ஏரியில் விசப்பட்டதாக ஓட்டல் உரிமையாளர் ராய் வயலாட்டு உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். ராய் தவிர குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் சுட்டிக்காட்டிய ஏரியின் நடுவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது குற்றவாளியான ராயின் வீட்டுக்கு அருகில் இந்த ஏரி உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் விபத்துக்கு சற்று முன்பு ஓட்டலில் நடந்த கேளிக்கை விருந்து காட்சிகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. டிஜே பார்ட்டியின் போது அசாதாரணமான ஒன்று நடந்ததாகவும், அதை மறைக்கவே ஹார்ட் டிஸ்க் ஏரியில் வீசப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

;