what-they-told

img

புற்றுநோய் ஆபத்து காரணிகளை கட்டுப்படுத்த செயலாற்றுவோம்! - பேராசிரியர் சோ.மோகனா

ஒவ்வொரு ஆண்டும்,உலகில், 9.6 மில்லியன் மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். பொதுவான புற்றுநோயாளிகளில் 1/3 பகுதி காப்பாற்றப்படக்கூடியவர்களே. உலகளவில் இறப்பின் காரணிகளில் புற்றுநோய்  இரண்டாவது இடம். 70% புற்றுநோய் இறப்புகள் மிகவும் வருமானம் குறைந்த, மற்றும்  நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிகழ் கின்றன. 3,7௦,௦௦0 உயிர்கள் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் பொருத்தமான உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் காப்பற்ற முடியும். புற்றுநோயின் மொத்த வருடாந்திர பொருளாதார செலவு 1.16 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

 அரசு நடத்திய தொற்றாத நோய்களின் பட்டியலில் வாய், கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்  உள்ளிட்ட பொதுவான புற்றுநோய்கள் 2017 மற்றும் 2018 க்கு இடையில் சுமார் 324% அதிகரித்துள்ளன என தேசிய சுகாதார தரவு (2019).தெரிவிக்கிறது. ஆண்களை விட துல்லியமாக 17,204 பெண்கள் இந்த நோய்க்கு ஆளா கின்றனர். மேலும்,1990 & 2016ஆண்டுகளுக்கு  இடையில் மார்பக புற்றுநோய் பாதிப்பு 39.1% அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் பெண்கள் மத்தியில் மிகவும் பொதுவான புற்றுநோயாகும்.  இந்தியாவில் சுமார் 22 லட்சம் பேருக்கு புற்று நோய் பாதிப்பு. 2020 க்குள் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் பதிவும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகளும் பதிவாகும்.

புற்று நோய்க்கான நேரடி காரணம் எதுவும் இல்லை. மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்தாலும், புற்று நோய் வருகிறது. இருப்பினும், சிலவகை காரணிகள் ஒருவரின் வாழ்நாளில் புற்று நோயைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். இந்தியாவில் மிகவும் பொதுவானவை மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், வாய் புற்று நோய்.இதில் மார்பக புற்றுநோய் இந்தியாவில் முன்னணி நோய்களில் ஒன்று. பொதுவாக புற்று நோய்க்கு பின்னர் உயிர் வாழ்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும்  புற்றுநோய் மிகவும் நாள்பட்ட நிலையில் கண்டறிந்தால் உயிர் பிழைத்தல் அரிது. நிலை 4 (மெட்டாஸ்டேடிக்) மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உயிர்வாழ்தல் வாய்ப்பு 22 சதவீதமாககுறைகிறது. வளர்ந்த நாடுகளில் பொதுவாக புற்று நோய் இறப்பு குறைவு. நீண்ட ஆயுளும் அதிகமாக இருக்கும். புகையிலை பொருட்கள், சிகரெட்டுகள், குழாய், ஹூக்கா அல்லது மெல்லும் குட்கா போன்றவற்றால். நுரையீரல் அல்லது வாய்வழி குழி பெற அதிக வாய்ப்பு கள் உள்ளன. பாதுகாப்பற்ற உடலுறவும் கூட புற்று நோயுடன் தொடர்புள்ளது. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பதப்படுத்தப்படாத உணவு, அதிகம் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் குறைந்த மாமிசம் போன்றவை உதவும். தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் கணிசமாக புற்று நோயைத் தவிர்க்க உதவும்.

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் ஏற்பாடு செய்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்று நோயால் பாதிக்கப்படக்கூடிய துன்பங்களின் அநீதியை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச சமூகத்தை அணி திரட்டுவதற்கான வாய்ப்பு இது.. இந்த ஆண்டின் மையக்கரு” I Am And I Will” நான் இருக்கிறேன், என்னால் முடியும் என்பதே. எனவே, இந்த பிப்ரவரி 4ல் நீங்கள் யாராக இருந்தா லும், உங்கள் செயல்கள், பெரிய மற்றும் சிறிய - நீடித்த, நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும்.முன் னேற்றம் சாத்தியமாகும். புற்றுநோய் ஆபத்து காரணி களைக் குறைக்க நாம் ஒன்றிணைந்து செயல்படலாம். ஆரம்பகால நோயறிதல், சிகிச்சை மற்றும் நோய்த்தடுப்பு, சிகிச்சைக்கான தடைகளை நாம் கடக்க முடியும். 

ஒவ்வொரு செயலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்து கிறது. நம்மால் முடிந்ததை உலகுக்குத் செய்வோம்.புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் என்னால்  ஈடுபட முடியும் என்பதை அந்த தினத்தை ஆதரிக்கும் அனைவரும் வெவ்வேறு தேவைகள் மற்றும் முன்னுரி மைகள் உள்ளன. எப்படியாயினும் நீங்கள் ஈடுபட பல்வேறு வழிகள் உள்ளன; ஈடுபடுங்கள் நண்பர்களே!

இன்று (பிப்ரவரி 4) உலக புற்று நோய் தினம்