weather

img

தமிழகத்தில் அதிக மழை தொடரும்.. வானிலை மையம் அறிவிப்பு...

சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.

இதுகுறித்து  வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளரிடம் கூறியதாவது:-புரெவி புயல் முதலில் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையை கடக்கும். பின்னர் அரபிக்கடலுக்கு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புயல் சற்று திசை மாறி வடமேற்கு நோக்கி பயணித்து பாம்பன் அருகே நிலை கொண்டிருந்தது.இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. அதன்பிறகு அது மேற்கு தென்மேற்கு திசையில் சற்று நகரத் தொடங்கியது.எனவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ராமநாதபுரம்- தூத்துக்குடி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்யும். குறிப்பாக நாகை, கடலூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை பெரம்பலூர், புதுச் சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி, நாமக் கல், சேலம், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழை தொடரும். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் கன மழை பெய்யும்.இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

;