weather

img

பல மாநிலங்களில் வெப்பநிலை உயரும்.... தென் இந்தியாவில் சில பகுதிகளில் குறையும்.... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுதில்லி:
மார்ச் மாதம் முதல்  மே மாத இறுதி வரை வெயில் நிலவரம்  குறித்து இந்தியவானிலை ஆராய்ச்சி மையம் (IMD)விரிவான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மார்ச் முதல் மே மாதம் வரை வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு இந்தியா, மத்திய இந்தியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகளிலும் வழக்கமாக வெயில் காலத்தில் பதிவாகக்கூடியதைக் காட்டிலும் சற்று அதிகமான வெப்பம் நிலவக்கூடம்.

சத்தீஸ்கர், ஒடிசா, குஜராத், கரையோர மகாராஷ்டிரா, கோவா, ஆந்திரப் பிரதேச மாநிலங்களிலும் வழக்கத்தைவிட அதிகமான வெப்பமே நிலவும்.ஹரியானா, சண்டிகர், தில்லிஉள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவ 60 சதவீதம் அதிக வாய்ப்புள்ளது. சத்தீஸ்கர், ஒடிசாவில் வழக்கத்தைவிட 75 சதவீதம் அதிகமான வெப்பநிலை நிலவலாம்.மொத்தத்தில், மார்ச் மே காலகட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, கிழக்கு உத்தரப்பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வழக்கத்தைவிட 0.5 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருதஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

தென் இந்தியாவில் சில பகுதிகளில் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில், கோடை கால வழக்கமான வெப்பநிலையைவிட குறைவாகவே பதிவாகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.பசிபிக் கடற்பகுதியில் மிதமான லா-நினா தாக்கம் இருப்பதாகவும் ஐஎம்டிகணித்துள்ளது. இது வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது சற்றேதீவிரமடையும் என்றும் தெரிவித் துள்ளது. லா-நினா நிகழ்வின்போது, மேற்பரப்பிலுள்ள கடல்நீரின் சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.