சென்னை:
தென்மேற்குப் பருவமழை தமிழகத்திலும் முன்னேறியுள்ளது. இது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் மாற்றம் தமிழ்நாட்டின் தென்கடல் ஓரத்தில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி, குமரிக் கடல் மற்றும் இலங் கையை ஒட்டி நிலவும் வறட்சி காரணமாகவும் கர்நாடகம் முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் ஜூன் 4ஆம் தேதி டெல்டா மாவட் டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை, மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலு டன் கூடிய கன மழையும் பிற மாவட்டங்க ளில் மிதமான மழையும் பெய்தது.ஜூன் 5 ஆம் தேதி தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட் டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 6ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட் டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.